பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

ஒட்டக்கூத்தன் காலத்திலிருந்து கம்பன் காலத்தை நிர்ணயிப்பதில் இத்தனை முரண்பாடு சம்பவிக்கிறது. தொன்றுதொட்டு வந்திருக்கிற தனியன் பிரகாரம் கம்பன் ராமாயணத்தை சகம் 807 இல் அரங்கேற்றினான் என்று கொள்ளுவதற்குச் சரியான ஆக்ஷேபணை ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை.

[1]


  1. சில ஏட்டுப்பிரதிகளில் கம்பராமாயணத்தின் முடிவில்,

    ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து, தேவன் திருவெழுந்தூர் நல் நாட்டு ——மூவலூர்ச்
    சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
    கார் ஆர் காகுத்தன் கதை.

    என்று ஒரு வெண்பா காணப்படுகிறது என்றும், சகரர் ஆண்டு என்பது சாலிவாகன சகாப்தமே என்றும், இந்த வெண்பாவானது கம்பன் ராமாயணத்தை சகம் 1100-இல் பாடினான் என்று சொல்லுகிறது என்றும் ஸ்ரீமான் ராகவையங்கார் கூறுகிறார். இதில் விசாரிக்கவேண்டிய விஷயங்கள் பின்வருபவை: இந்தப் பாட்டு எழுதப்பட்டு இருக்கும் ஏட்டுப் பிரதிகளில் 'எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின் மேல்' என்கிற வெண்பா ஏதாவது ஒரு பாகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? சுகரர் ஆண்டு சாலி வாகன சகாப்தம்தான் என்பதிற்கு ஆதாரம் என்ன? கம்பன் மூவலூரான் என்பதற்கு வேறு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? இந்தப் பாட்டில் சொல்லும் 'கவியின் தகப்பனார் பெயர் ஆதித்தனா, குணாதித்தனா? எமக்கேற்படி ராமாயணம் *எக்காலத்தும், எல்லோரையும் ஆகரிஷிக்கும் கதையாதலால் பிற்காலத்தில் மூவலூரிலுள்ள வேறொரு கவி ராமாய்ணம் பாட, அதன் பாசுரத்தில் இந்த வெணபா வந்திருக்கலாம். பலராம கதைகளைச் சேர்த்து ஒரே வரிசையில் கட்டு வைத்தவர்களிடமிருந்து. கம்பராமாயணத்தைப் பெயர்த்து எழுதுவோர், இதற்குச் சேராத, குணாதித்தன் மகன் எழுதிய ராம கதையைச் சேர்ந்த, இந்த வெண்பாவைக் கம்பராமாயணத்தின் இறுதியில் சேர்த்தெழுதியிருக்கலாம். தவிர இந்தக் குணாதித்தன் சேயும் கம்பன் வமிசத்தவனாக இருந்தும் இருக்கலாம். அப்படி இருந்தால், இந்தப்பாட்டு இடம் மாறிக் கம்பராமாயணத்துக்கு வருவதற்குக் காரணங்கள் அதிகப்படும். எதற்கும், நூல் செய்த காலத்தைக் குறிப்பிடும் பாட்டுக்கள் நூல்களின் துவக்கத்தில் தான் வருகிறது வழக்கமாதலாலும், இந்த வெண்பாவில் நம் கம்பனுடைய பெயர் இல்லாததாலும், ஊரும் தகப்பன் பெயரும் மாறாக இருப்பதாலும், இந்த வெண்பா நமது விவகாரத்தில் ஒன்றையும் விளக்கவில்லை என்று தீர்மானிக்கிறோம்.