28
விட்ட படலத்திலாவது இதைப்பற்றிப் பேசாமலிரான். மேலும் தான் பரதெய்வமாகக் கருதியிருக்கிற ஸ்ரீமான் ராமன் குலத்தவரைப் பற்றித் தன் ராமாயணத்தில் உற்சாகத்தோடும் அபிமானத்தோடும் அவன் பேசாமலிருக்க முடியாது. ராமாயணத்தின் முடிவில்வரும் வாழ்த்துப் பாக்களில் கூடச் சோழ அரசர் பெயர் வரவில்லை. ஆகையால் சோழ வமிசம் இக்ஷ்வாகு வமிசத்திலிருந்து பிரிந்தது என்ற கலிங்கத்துப்பரணிக் கதை பிறக்கு முன்னரே கம்பன் ராமாயணத்தைப் பாடியிருக்கவேண்டும் என்று ஏற்படுகிறது.*
- ↑ கம்பன் சோழர்களைப் பற்றி ராமாயணத்தில்தான் இரண்டு இடங்களில் தான் சொல்லுகிறான். அவை, கிஷ்கிந்தா காண்டம், பிலநீங்கு படலத்தில்,
புவி புகழ் சென்னி, போர் அமலன், தாள் புகழ்
கவிகள் தம் மனை என,என்று துவக்கும் செய்யுளும், யுத்த காண்டம் மருந்துமலைப் படலத்தில் அநுமானுடைய மார்க்கத்தை வருணிக்கையில் வரும்.
சென்னி, நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன் தெய்வப்
பொன்னி நாட்டு உவமைவைப்பைப் புலன் கொள நோக்கிப் போனான்}}என்ற அடிகளுமே. இவற்றில் சொல்லிய 'சென்னி' 'வீரன்' என்கிற பெயர்கள் ஒரு சோழனுடைய இயற்பெயர் என்றும், அந்தச் சோழன்தான் ஓட்டக்கூத்தனால் பாடப் பட்ட 'இரண்டாங் குலோத்துங்கன்' என்றும், ஸ்ரீ ராகவையங்கார் சொல்லுகிறார். ஆனால் சென்னி என்பது சோழர்களுக்கே பொதுப்பெயர் ஆனதாலும், அரசர்களை வீரன் என்று ஏற்றிச் சொல்லுவதும் மரபானதாலும் இந்தப் பெயர்களை ஒரு சோழனுடைய சிறப்புப் பெயர்களாகக் கொள்ளவேண்டியது அவசியம். தவிர, இந்தப் பெயர்களுள்ள சோழன் வீரசைவன் , சிதம்பரத்திலுள்ள கோவிந்த ராஜப் பெருமான் விக்கிரகத்தைக் கடலிலிட உத்திர விட்டவன். இப்பேர்ப்பட்டவனை, ஸ்ரீவைஷ்ணவனாகிற கம்பன் தன் ராமாயணத்தில் ஏற்றிச் சொல்லியிருப்பான் என நினைக்க முடியவில்லை.