பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

இன்னொன்று, கம்பன்‌ சகம்‌ 1042 முதல்‌ 1122 வரையிலுள்ள காலத்தில்‌ விளங்கினான்‌ என்று கொண்‌டால்‌ உடையவர்‌ காலத்திற்கு மிகவும்‌ நெருங்கிக்‌ கம்பன்‌ பிரபலத்துக்கு வந்திருக்கவேண்டும்‌ என்று ஏற்படும்‌. அப்படியானால்‌ அவருடைய திவ்வியப்‌ ிரபாவத்தைக்‌ கண்ணால்‌ கண்ட சிஷிய வர்க்கத்தில்‌ பெரும்பாலாரை நேரில்‌ பார்த்திருக்கவேண்டிய ஸ்ரீவைஷ்ணவ தாசனான கம்பன்‌ அந்த மகானைக்‌ குறித்து ஒரு துதியேனும்‌ எழுதாமலிரான்‌. அப்பேர்ப்‌பட்ட செய்யுள்கள்‌ ஒன்றேனும்‌ இப்பொழுது காணப்‌படாதது கவனிக்கத்‌ தக்கது.

தவிர, கம்பனுக்கு இந்தக்‌ காலத்தைக்‌ கற்பித்‌தால்‌ அவன்‌, உபயகுலோத்துங்கனைப்‌ பாடிய கலிங்‌கத்துப்‌ பரணி எழுதப்பட்ட காலத்துக்குப்‌ பின்தான்‌ விளங்கியவன்‌ என்று ஏற்படும்‌. ஆனால்‌ பரணியில்‌ சோழ நாட்டரசர்‌ சூரிய குலத்தவர்‌ என்றும்‌, சோழ ராஜ்ஜியம்‌ ஸ்ரீராமனுடைய மூதாதைகளில்‌ ஒருவனால்‌ ஸ்தாபிக்கப்பட்டது என்றும்‌ சொல்லப்படுகிறபோது, கம்பன்‌ ராமகதையில்‌ பாலகாண்டம்‌ குலமுறை.

கிளத்துப்‌ படத்திலாவது, கிஷ்கிந்தா காண்டம்‌ நாட


கூத்தனுடைப அகங்காரத்தையும்‌ அழுக்காற்றையும்‌ கண்டு புழுங்கிய அவன்‌ காலத்துப்‌ புலவர்களோ, அல்லது ஆச்சரியப்பட்ட பிற்காலத்துப்‌ பண்டிதர்களோ, அவனுடைய அந்தத்‌ தீய குணங்களை மிகவும்‌ வற்புறுத்திக்‌ காட்டுவதற்‌காக, கவியிலும்‌ கல்வியிலும்‌ பெரிய கம்பன்‌ இருந்தால்கூட இவன் தூக்கியெறிந்து விடுவானடா என்பதைப்‌ புனைந்‌துரைக்க விரும்பி, கம்பன்‌ இவன்‌ காலத்தில்‌ இருந்ததாகவும்‌, இவன்‌ அவனை அவமதிக்க முயன்றதாகவும்‌ சுதை கட்டியிருத்தல்‌ வேண்டும்‌. நெடுங்காலத்துக்கு முன்‌ கம்பன்‌ பாக்கியாக விட்டுவிட்ட் உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தன்‌ பாடியதும்‌ இந்தக்‌ கதையை "ஜோடிப்பதற்குப்‌ பண்டிதர்‌களுக்கு ஒரு சிறந்த உபகாரமாக இருந்திருக்கவேண்டும்‌.