பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

திருந்தால் 1059க்குள் ராமாயணம் பாடி அரங்கேற்றிச் சீரெய்தியிருப்பது அசாத்தியமென்று சொல்லவேண்டுவதில்லை.

இன்னும் புகழேந்தியும் ஒட்டக்கூத்தனும் சம காலத்தவர் என்று கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. விக்கிரம சோழனையும், குலோத்துங்க சோழனையும் புகழேந்தியும் பாடியிருப்பதால் இவ்விரு கவிஞரும் ஒரே காலத்தவர் தாம் என்று நாமும் ஒப்புக்கொள்ளுகிறோம். கம்பனும் ஒட்டக்கூத்தன் காலத்தவன் என்று கொண்டால் ஏற்கனவே சொல்லியபடி, நாலைந்து வருஷங்கள் தான் அரசாண்ட குலோத்துங்கன் ஆட்சிக்கு நெடுங்காலம் முன்னதாகவே ராமாயணம் பாடி அரங்கேற்றியிருக்க வேண்டிய அவன் புகழேந்தி சீரோடு விளங்கின காலத்திலேயே தானும் விளங்கினான் என்று ஏற்படும். அப்படியிருந்தால் ஒட்டக்கூத்தனுக்கும் புகழேந்திக்கும் சம்பந்தம் கூறும் கதைகள் எத்தனையோ இருக்கையில், கம்பனுக்கும் புகழேந்திக்கும் நேரே சம்பந்தத்தைக் காட்டக் கூடிய ஒரு கவிதையேனும் என் இல்லை என்று இயற்கையாகப் பிறக்கக்கூடிய கேள்விக்குச் சரியான பதில் சொல்லமுடியாது. இம் மூன்று கவிகளும் உண்மையாகவே ஒரு காலத்தவராக இருந்திருக்கும் பட்சத்தில், ஒட்டக்கூத்தனுடைய அழுக்காற்றுக்கும், குரோதத்துக்கும் இலக்கமாயிருந்த மற்ற இருவருக்கும் மிகநெருங்கிய நட்பு இருந் திருக்கும். அந்த நட்பைக் காட்டக்கூடிய கதைகளும் நமக்கு எட்டியிருக்கும்.*[1]


  1. ஒட்டக்கூத்தனும் கம்பனும் ஒரு காலத்தவரல்லாத போது கதைகள் ஏன் பிடிவாதமாக இருவரையும் பிணைத்தே கூறுகின்றன என்று கேட்டால், நாம் ஏற்கனவே 27-ம் பக்கத்தில் சொல்லியதோடு இதுவும் சொல்லுவோம்: கூத்தனுடைப அகங்காரத்தையும்‌ அழுக்காற்றையும்‌ கண்டு புழுங்கிய அவன்‌ காலத்துப்‌ புலவர்களோ, அல்லது ஆச்சரியப்பட்ட பிற்காலத்துப்‌ பண்டிதர்களோ, அவனுடைய அந்தத்‌ தீய குணங்களை மிகவும்‌ வற்புறுத்திக்‌ காட்டுவதற்‌காக, கவியிலும்‌ கல்வியிலும்‌ பெரிய கம்பன்‌ இருந்தால்கூட இவன் தூக்கியெறிந்து விடுவானடா என்பதைப்‌ புனைந்‌துரைக்க விரும்பி, கம்பன்‌ இவன்‌ காலத்தில்‌ இருந்ததாகவும்‌, இவன்‌ அவனை அவமதிக்க முயன்றதாகவும்‌ சுதை கட்டியிருத்தல்‌ வேண்டும்‌. நெடுங்காலத்துக்கு முன்‌ கம்பன்‌ பாக்கியாக விட்டுவிட்ட் உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தன்‌ பாடியதும்‌ இந்தக்‌ கதையை "ஜோடிப்பதற்குப்‌ பண்டிதர்‌களுக்கு ஒரு சிறந்த உபகாரமாக இருந்திருக்கவேண்டும்‌.