பக்கம்:கரிகால் வளவன்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

திடீரென்று புதிய யோசனை ஒன்று தோன்றியது. தன்பால் வந்த வேளிர்களைப் பார்த்துச் சொல்லலானான்:

“நீங்கள் நம்மிடம் வந்ததைப் பாராட்டுகிறோம். போர் செய்வதானால் நம்முடைய பலத்தையும் துணையாக வருபவர் பலத்தையும் மாற்றான் பலத்தையும் சீர்தூக்கிச் செய்யவேண்டும். சோழ நாட்டு மக்கள் எளிதில் நம்மை ஆதரிப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மேலே போர் பெரியதாகி விட்டால் தளராது முன் நின்று போரிடுவதற்கு ஏற்ற பெரிய படை வேண்டும். சிறிது தளர்ச்சியிருந்தாலும் தோல்விக்கு இடம் உண்டு. ஆகவே-”

“போர் வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ?”

“இல்லை, இல்லை. நீங்கள் இதைப் போலத் தக்க செவ்வி கிடைக்காது என்று சொல்வதை நாம் நன்கு உணர்கிறோம். போர் செய்து சோழ நாட்டைக் கைப்பற்றுவது நமக்கு உடம்பாடான செயலே. ஆனால், இன்னும் படைப்பலம் சேர்த்துக்கொண்டு போரில் முனைவதே நலமென்று தோன்றுகிறது.”

“சிலகாலம் பொறுத்துப் போர் தொடங்கலாமென்பது தங்கள் கருத்தோ? அதற்குள் கரிகாலன் படைப்பலத்தைச் சேர்த்துக் கொள்ளுவானே!”

“இல்லை, இல்லை. போரை மிக விரைவில் தொடங்க வேண்டியது தான். தக்க துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லு-