பக்கம்:கரிகால் வளவன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வளவன் உறுதி பூண்டான். யார் யார் முன் நாட்களில் குறும்பு செய்தார்களோ அவர்களைப்பற்றிய செய்திகளை விசாரித்து அறிந்தான். கூட்டம் கூட்டமாகச் சில இனத்தினர் நாட்டில் கலகங்களை விளைத்து வந்தனர். அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துகொண்டான், சூட்டோடு சூடாகத் தன் படைப்பலத்தைப் பின்னும் பல மடங்கு அதிகப்படுத்திக்கொண்டான். இரண்டு போர்களில் வெற்றி பெற்றுவிட்ட உவகையினால் படையில் பல வீரர் சேர்ந்தனர். சோழ அரசன் சென்ற இடமெல்லாம் வெற்றி பூணுவான் என்ற உறுதி அவர்களுக்கெல்லாம் இருந்தது. படை வரவரப் பெருகியது.

கரிகாலன் உள்ளம் பூரித்தான். எயினர், நாகர், ஒளியர் என்ற கட்டத்தினர் அங்கங்கே இருந்து தம்மைச் சூழ்ந்த பகுதிகளில் பயமுறுத்தி மக்களை அடக்கி ஆண்டு வந்தனர். அத்தகைய கூட்டத்தினரையெல்லாம் முதலில் அடக்கினான். பாண்டியனும் சேரனும் வெண்ணிப் போரில் தோல்வியுற்றாலும், அவர்கள் பரம்பரையினர் மீட்டும் பகைத்துப் போர் புரியக் கூடுமல்லவா? ஆதலின், அந்த நாடுகளுக்கெல்லாம் சென்று அங்குள்ளவர்கள் வழிபட, அந்த மன்னர்களைத் தன் ஆட்சிக்கு உட்பட்டவர்களாகச் செய்து கொண்டான்.

மேலும் மேலும் வெற்றி கிடைக்கவே, திருமாவளவனுக்கு ஊக்கம் எல்லையின்றி உயர்ந்து நின்றது. வெற்றி மிடுக்கு, பரந்த படை, பழம் பெருமை இத்தனையும் இருக்கும்போது அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/52&oldid=1205666" இலிருந்து மீள்விக்கப்பட்டது