பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I27

தங்கள், பத்திரம், வேலுவின் கல்லூரிப் படிப்பு உதவிச் சம்பளக் காகிதங்கள் எல்லாம் இருக்கின்றன. -

அதைத் திறக்கும் போதெல்லாம் ஒரு கோடித் துணியில் முடிப்புக் கட்டி வை த்திருக்கும் செவந்திப் பெண்ணின் அரைப் பவுன் தாலியைப் பார்க்காமலிருக்க - _மாட்டார். இன்னும் பழக்கத்தில் அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கையில் பகீரென்றது, துணி அவிழ்ந்து கிடக்கிறது: அது...அது எங்கும் இல்லை. அவர் உதடுகள் துடிக்கின்றன. நெற்றி நரம்புகள் புடைக்கின்றன.

‘ஏளா?...பொட்டிய ஆரு திறந்தது? பொட்டிய ஆரு திறந்ததுன்னே?...’

அவர் குரலில் கனல் கொப்புளித்துச் சீறுகிறது. அந்தச் சிறலுக்கு எதிரொலி இல்லை. இது அவர் சீற்றத்தை இன்னும் வீச்சாகக் கக்குகிறது. “இது ஆரு வேல ஆரு பொட்டிய திறந்திய?

பின்னே வந்து பானை கழுவும் மனைவியின் முடியைப் பற்றுகிறார்.

விடும். ஏணிப்பக் கூப்பாடு போடுறிய முடியப் புடிக்கிறிய அவளுக்கும் நெற்றிக்கண் இருக்கிறதென்று காட்டுகிறாள். o -

“ஒமக்குக் கண்ணுமண்ணு தெரியாது! பொட்டிய நாந்தா தொறந்தே! என்ன பண்ணச் சொல்றிய’

அவருக்கு உதடுகள் துடிக்கின்றன. என்ன செய்வ தென்று தெரியத்தானில்லை.

எமூதி, எந்தங்கச்சி பிள்ளைய வெரட்டி அடிச்சது நீதா அவ...அவ நகை நட்டெல்லாம் வித்துப்போட்டே, ஒரு அரைப் பவன் சொத்து, அதைவச்சிருந்தே, மங்கிலியம். அதை எங்கே கொண்டு போட்டிய அம்மையும் மவனுமா?

“எங்கும் கொண்டுப் போடல. நீரு பாட்டுல காத்துட்டு இல்லாம பொறப்பட்டுப் போட்டிய. அவ இந்தச்சணம் இன்னாச்சியோட் ப்ோவேன்னு குதிக்கா. முக்காத்துட்டு இல்ல. கடன் வாங்கற பக்கமெல்லாம் கடன். முன்சிப் வீட்டு