பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Io கரிப்பு மணிகள்

கிறான். அவன் வகையில்தான் ராமசாமிக்குச் சம்பளம் ‘ஏலே, ராமசாமி?... மொதலாளி ஒன்னக் கூப்பிடுறா...’

ராமசாமி நிமிர்ந்து பார்க்கிறான். விழிகள் ஒரு கேள்விக் குறியாக நிலைக்கின்றன. முதலாளி அவனைக் கூப்பிடுகிறாரா? எத்ற்கு? முதலாளிகள் எப்போதும் தொழிலாளியை நேராகப் பார்த்து எதுவும் பேச மாட்டார்களே?

அந்நாள் சண்முகக் கங்காணி ராமசாமியைச் சிறு பையனாக உப்புக் கொட்டடியில் வேலைக்குக் கொண்டு வந்து சேர்க்கையில் அளத்தில் இவ்வளவு சாலைகளும், கட்டிடங்களும் கிடையாது. அவன் வேலைக்குச் சேர்ந்து பல நாட்கள் சென்றபின் ஒருநாள் அறவைக் கொட்டடி வாயிலில் ஒரு பெரிய மனிதர். சந்தனப் பொட்டும் குங்கும முமாக வந்து பலர் சூழ நின்றிருந்தார். அவனைக் கங்காணி கூட்டிச் சென்று அவர் முன் நிறுத்தினார்.

“இவனா?...” என்று கேட்பது போல் அவர் கண்கள் அவன் மீது பதிந்தன. -

“என்ன கூலி குடுக்கிறிய’ என்று வினவினார். “ஒணண்ே கா ருவாதா...’ என்று கங்காணி அறிவித் தார்.

தொழி வெட்டிக்குடுக்க காவாய் கசடு எடுக்கன்னு போட்டுக்க. ரெண்டு ரூபாய் குடு...’ என்றார்.

அப்போதுதான் அவர் பெரிய முதலாளி என்றறிந் தான். அந்நாளில் தனக்கு மட்டும் அந்தப் பெரியவரின் ஆதரவு கிடைத்திருக்கிறதென்று அவன் மகிழ்ச்சி கொண் டான். மற்றவர்களிடையே கர்வமாக நடந்தான். தொழியில் அவ்வப்போது நீர் பாய மடைதிறந்து விடுவது அடைப்பது; அலுவலகத்தில் எப்போதேனும் யாரேனும் வந்தால் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் சோடா வாங்கி வருவது போன்ற வேலைகளுக்கு அவன் உயர்ந் தான். ஐட்ரா பிடிக்க அவன் உயர்ந்த போது கூட முதலாளியைப் பார்க்கவில்லை. முதலாளிக்கு வயதாகி