பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 135

“சரி உனக்கு இருநூறாச் சம்பளம் உசத்தியிருக்கு. சம்மதம் தானே?” -

ராமசாமிக்குச் சில கணங்கள் பேச்சு வரவில்லை.

இந்த முதலாளி சும்மாக் கிடப்பவனை வலிய அழைத்து, உனக்கு இங்கேயே வீடு வைத்துக் கொள். சம்பளம் ஐம்பது ரூபாய் போல் அதிகம் தருவதாக எதற்குச் சொல்கிறார்? துண்டிலில் இருக்கும் புழுவை இழுக்க வரும் மீன்கூட அவ்வளவு எளிதில் பாய்ந்து விடாது. இது எதற்காக? இப்படி ஐம்பது ரூபாயை வீசி எறிந்துவிட அவர்கள் முட்டாள் களில்லை. மனிதாபிமான ஈரமில்லாமல் அள்த்துக்காரர் களிடம் வேலையை வாங்குகிறார்கள். பத்து பைசா அதிகம்

கொடுத்து விட மாட்டார்கள். அதுவும் இந்த முதலாளி :ைேமக்கெல்லாம் சென்று படித்தவர். l

  • ராத்திரியும் பொறுப்பாக வேலை பார்க்கணுமா?” என்று ராமசாமி ஒரு கேள்வியைப் போடுகிறான்.

“அப்படியெல்லாமில்லை. ஏற்கெனவே சில பேருக்குக் கோயிலுக்குப் பக்கத்தில் வீடு வைத்துக் கொள்ளலாமின்னு சொல்லியிருக்கிறேன். நீயும் இங்கேயே இருந்தால் சவுகரியமா

இருக்கலாம்னு சொன்னேன்...’

  • ரொம்ப சந்தோசம். எனக்கு மட்டும் இதெல்லாம் குடுக்கிறீங்க. சொல்லப் போனா எனக்கு ரொம்பக் கஷ்ட மில்ல. என்னக் காட்டிலும் கஷ்டப்படுறவங்கதா அதிகம் கண்ட்ராக்ட் கூலிங்க அஞ்சாறு கல்லுக்கப்பால இருந்து வரா, இத, நாச்சியப்பன் கூலிக்காரங்க தூத்துக்குடி டவுனுக் குள்ளாறேலேந்து வராவ. அவியளவிட எனக்கு என்ன கஷ்டம்?” -

கண்ட்ராக்ட்காரங்க சமசாரம் வேற, அதப்பத்தி நீ ஏன் பேசறே? மாசச்சம்பளம் வாங்குறவங்களுக்குச் சில சலுகை கொடுக்கலான்னு தீர்மானிச்சிருக்கிறேன். அதில நீயும் வாரே, அதான் கூப்பிட்டுச் சொன்னேன்...'