பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 169

ரூபாய் செலவு செய்தால் அவனை விடுவித்து வந்து விடலாம்.

மாமனைத் தேடிச் சென்று அங்கே அல்லிக்குளம்பகமை.மாமி ஏசினாலும் உற்ைக்காது...இருநூறு ரூபாய்... அம்மா... !

  • ஏத்தா? எதிரே லாரி தெரியாம ஒடுற?” அவளை அந்த முடுக்குச்சந்தில் ஒருவன் கையைப் பற்றி இழுக்கிறான். அவள் கையை உதறிக் கொண்டு ஒதுங்கு கிறாள்.

சாக்கடை ஒரமாக, மூடப்பெற்றதோர் கடைப்படிகளில் ஒரு கூட்டம் இருக்கிறது. சில பெண்கள், சில ஆண்கள்குந்திக் கொண்டும் நின்று கொண்டுமிருக்கின்றனர். அவர் களில் ஒருவன் கையில் கடியாரமும் சற்று மிடுக்குமாக விளங்குகிறான்.

ஒரு பெண் அவனிடம் அழுது முறையிட்டுக் கெஞ்சு கிறாள். முடியை அள்ளிச் செருகிக் கொண்டு, தேய்ந்த கன்னங்களும் குச்சிக் கைகளுமாகக் காட்சி அளிக்கிறாள்.

ஆசுபத்திரில புருசங் கெடக்கா, புள்ளய அஞ்சும் நாலுமா-நா மூணு நாளாச்சி அவியளுக்குச் சோறு போட்டு, ராவும் பவலுமா ஓடி வந்த நாலு ருவாக் கூலி குறைச் இருக்கிய நா என்ன சேவ...இது நாயமா கங்காணி?...” அவள் முறையீட்டை அவன் கேட்க விரும்பவில்லை மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கிறான். வேறு ஆண் பிள்ளைகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. குந்தியிருக்கும் பெண்களில் மூதாட்டி இருக்கிறாள்; சிறு வயசுக்காரியும் இருக்கிறாள்...

“ராவும் பவலுமா ஒடிவந்த மூணு நாளாச்சி புள்ளயளக் கவனிச்சி சோறுவச்சி...’

இவர்கள் வித்து மூடைக்காரர்கள் என்று பொன் னாச்சி புரிந்து கொள்கிறாள். உப்பு அம்பாரங்களை மூட்டை களில் நிரப்பிக் கரைக்கும் தொழிலாளிகள், பக்கத்து வீட்டி

க-11