பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கரிப்பு மணிகள்

லிருக்கும் பவுனுவைப் போன்ற தொழிலாளிகள். கங்காணி அவள் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது லாரி வந்திருக்கு!’ என்று குரல் கொடுத்தால் அப்படியே விட்டுவிட்டு ஓடவேண்டும்.

இவளும் அப்படித்தான் ஒடிவந்திருக்கிறாள். ஆனா லும் கூலி குறைப்புச் செய்திருக்கிறான். இவளுக்கு மட்டும் தானா? ஏன் குறைத்தான்? அவள்...

அவளுடைய ஒலம் அந்தச் சந்திப் பேரிரைச்சலின் இடையே பொன்னாச்சிக்குத் தெளிவாகக் காதில் விளுகிறது. ஆனால் அந்தக் கங்காணி செவியில் போட்டுக் கொள்ள வில்லை. லாரி திரும்பியதும் படியை விட்டிறங்கி அவன் நடந்து போகிறான். அவளும் ஒலமிட்டுக் கொண்டு சில அடிகள் தொடருகிறாள். மற்றவர்கள் தங்கள் தங்கள் கூலி கவைப் பார்த்தவண்ணம் அவர்கள் போக்கில் செல் கின்றனர்.

டீக்கடை இயக்கம், போக்குவரத்துச் சந்தடிகள் ஏதும் குறையவில்லை. அவள், அந்தப் பெண், நான்கு ரூபாய், குறைக்கப்பட்டுவிட்டதை எண்ணி விம்மி வெடிக்க அழுது கொண்டே சிறிதுநேரம் நிற்கிறாள்.

அன்றொருநாள் தான் நின்ற நினைவு பொன்னாச்சிக்கு வருகிறது. இப்படி எத்தனையோ பெண்கள்-தொழிற் களத்தில் தேய்ந்து, குடும்பத்துக்கும் ஈடுகொடுக்கும் பெண்கள்-மஞ்சளையும் கிரசினையும் குழைத்துப் புண்ணில் எரிய எரியத் தடவிக் கொண்டு அந்த எரிச்சலிலேயே உறங்கி மீண்டும் புண் வலுக்கப் பணி யெடுக்க வரும் பெண்கள்அங்கிருந்த ஆண்கள் யாரும் கங்காணியை எதிர்க்கவில்லை. பொன்னாச்சி அங்கு வந்த வழி மறந்து போனாற்போல் நிற்கிறாள். மாமன் வீட்டுக்குப் போவது “துரோகச் செயல்’ என்று தோன்றுகிறது. அவள் போகவில்லை. வீடு திரும்பும் போது அவள் ஒரு சுமை விறகு தூக்கிச் செல்கிறாள்.