பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அம்மன் கொடை என்று குடித்துவிட்டு ஆடும் ஆட்டக் காரர்களிடம் அருணாசலத்துக்கு வெறுப்பு உண்டு. ஆனால், ஆடி அமாவாசைக்கு ஒடையில் மூழ்கிச் சங்கமுகேசுவரரை வழிபடாமலிருக்கமாட்டார். கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை கிடையாது. முட்செடிகளும் புதருமாக நிறைந்த காட்டில் ஒற்றையடிப் பாதையில்தான் கோயிலுக்கு நடந்து வரவேண்டும். அவரைப் போன்ற பக்தர்களும், பரதேசிப் .பண்டாரங்களும் அக்கம் பக்கங்களிலிருந்து அந்நாளில் அங்கு

வருவார்கள்.

கோயங்காடு கதிரே சம்பிள்ளை; சண்முகபுரம் வீராசாமி நாடார் ஆகியோர் அந்தப்பக்கம் நிலச் சொந்தக்காரர்கள். பாலம் வந்து சாலையுடன் தொடர்பு ஏற்பட்டால் அவர் களுடைய நிலத்துக்குக் கிராக்கி ஏறும். அந்தக் குடும்பத் தினரும் சங்கமும் ஒடையில் முழுகி ஈசுவரரை தரிசிக்க வருவார்கள். முன் பெல்லாம் குடும்பத்துடன் அதிகாலையில் அங்கு வந்துவிடுவார்கள் சிவந்திப் பெண் சுருகருவென்று அங்கே பெட்டி நிறைய இட்டிலியுடன் இலைக்கட்டுமாகக் கடை போட்டுவிடுவாள். அவளைப் போன்ற சுறுசுறுப்பு யாருக்கும் கிடையாது. வழிபாட்டுக்கு வந்தவர் அனைவரும் இட்டிலி வாங்கித் தின்று வயிறு குளிரத்தான் திரும்பு வார்கள்.

கைலாசக்குருக்கள் அதிகாலையில் வந்து, சிவனாருக்கு அபிடேகம் செய்து வில்வமும் அரளியும் கொய்து வந்து பூசை செய்திருக்கிறார். கூட்டமே இல்லை. பத்துப்பேர் கூட நீராடுவதற்கும் சுவாமி தரிசனத்துக்கும் வரவில்லை. காரும் பஸ்ஸும் எங்கெங்கோ கடற்கரைகளுக்கு மக்களைக் கூட்டிச் செல்கையில் இந்த மூலைக்கு நடந்து யார் வருவார்கள்!

அவர் நீராடி. ஈசனை வழிபடுகிறார். ஒவ் வொரு ஆண்டிலும் ‘கூட்டுறவு உப்புத் தொழிலாளிகள் உற்பத்தி,