பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கரிப்பு மணிகள்

தாய் கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தட்டிப் பெருக்குகையில் அவன் கயிற்றையும் வாளியையும் எடுத்துக் கொண்டு தெருக் கோடியில் இருக்கும் உறைக்கிணற்றுக்கு வருகிறான். - கிணற்றில் வனப்பும் வாளிப்புமாக ஒருத்தி நீரிறைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றுத் தள்ளி ஒரு ஆண் குளித்துக் கொண்டிருக்கிறான்.

தண்ணி நல்லாயிருக்குமா?” என்று ராமசாமி கேட் இறான். அவள் ஒரு மயக்குச் சிரிப்பை நெளிய விடுகிறாள். வாரும் மாப்பிள? புதிசா வந்திருக்கியளா?. தண்ணி ரெண்டு டிகிரிதா...!”

‘சருவத்தை இப்படி வையும்...’ என்று இழுத்து நீரை ஊற்றுகிறாள். ராமசாமி வாயில் விட்டுப் பார்த்துக் கரிப்பை உடனே துப்புகிறான்.

“எப்பிடி இருக்கு?...” அவள் சிரிக்கிறாள். :அண்ணாச்சி இதுல குளிக்கிறாரேன்னு பார்த்தே!” :பின்னென்ன சேய? வண்டித் தண்ணி அடிப்பா. அம்பது கொடம் இருக்கும். இந்தத் தாவுல எம்பது ஆடு இருக்கு. அடிபிடின்னு மோதிக்கிவா. அதும் இப்ப சுத்தமா பத்து நாளாச்சி! முனிசியாலிடிக்காரனயே காணும்’ என்று குளித்துக் கொண்டிருப்பவன் தெரிவிக்கிறான். -

“ஆமா, இந்த ஆம்புளிய ஆரு போயிப் பாக்கா, கேக்கா? பொம்பிளயருக்கு என்ன தெரியுது..?

“குடிக்க நீரு?” ‘இதா போவாங்க இன்னிக்கு. மேக்கே போனா கோயில் கேணி. தண்ணி பஷ்டாயிருக்கும். நாலு கல் போனா வண்ணாந்துறை இருக்கு, துணி தப்பி அலசிட்டு வரலாம்...” “வோட்டு வாங்கிட்டுப் போவ அல்லாம் வருவா, பொறவு ஒருத்தரும் கண்டுக்கறதில்ல. தலைவர் வூடு கட்டுறாருன்னு கச்சிக்காரங்ககிட்ட ஆளுக்கு ஒரு ருவா