பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சரிப்பு மணிகள்

படுத்து ஒறங்கணும். மூணு நாளா ராவுலதா வேல. ஆனா இப்ப படுத்தாலும் ஒறக்கம் புடிக்குமான்னு தெரியல. ஒரு ..ப்பளத் தொழிலாளியின் குடும்பம் எப்படி இருக்குங்கறதுக்கு இந்தக் குடும்பமே போதும். முப்பது வருசம் வேல செஞ்சும் ஒரு பிசுக்கும் ஒட்டல. பெரிய போராட்டத்துக்கு நாம் கொடி எடுத்துத்தானாகணும். கட்சி கிட்சின்னு ஒண்னும் ஒதுங்கக் கூடாது...ஆச்சி நீங்கதா இதுக்கு சப்போட்டா இருக்கனும். ரெண்டு நா வேலயில்லேன்னாக்கூடிக் கஞ்சி குடிக்க ஏலாமப் போயிரும். முன்ன. இருபத்துமூணு நா ஸ்டைக் பண்ணினாங்க. பனஞ்சோல அளம் இல்ல அப்ப, தாக்குப் புடிக்காம ஆளுவ போயிட்டா. கூலி கொறஞ்சி போச்சி. அப்படி அத்திவாரம் இல்லாத வீடு கட்டல் கூடாது...’

ஆச்சி ஏதும் மறுமொழி கூறவில்லை. புகையிலைக் காரத்தில் அமிழ்ந்தவளாக மெளனமாக இருக்கிறாள். பிறகு பொன்னாச்சியைக் கிளப்புகிறாள்.

போட்டி, போயி செத்தப்படுத்து ஒறங்கு மாமனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கு. வெடிஞ்சி அவிய துட்டிக்கு வருவா. அப்பச்சி என்னேயான்னு பாரு வெடிஞ்சி மத்தது பேசிக்கலாம்.” -

பொன்னாச்சி பெருஞ்சோரத்திலிருந்து எழுந்திருக் கிறாள். - -

நீ இந்நேரம் வீட்டுக்குப் போவாட்டி இப்படியே கெடந்து ஒறங்கு. தலையாணி போர்வை தார...’ என்று ராமசாமியிடம் கூறுகிறாள். _ - .அதெல்லாந் தேவையில்ல ஆச்சி. ஒறக்கம் வந்தா நின்னிட்டேகூட ஒறங்கிடுவ. இப்ப நீரு பாயி தலையாணி தந்தாலும் உறக்கம் வராது போல இருக்கி...’

போட்டி...போ, ஏ. நிக்கிற.” பொன்னாச்சி அங்கிருந்து அகலுகிறாள். - ராமசாமிக்கு ஒரு தலையணை கொண்டு வந்து ஆச்சி கொடுக்கிறாள்.