பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கரிப்பு மணிகள்

பொன்னாச்சி பார்க்கிறாள். கடலாய் அந்தக் கூட்டம் தெருவை நெருக்கியடித்துக் கொண்டு வருகிறது. அந்தப் பெருங்களத்தில் பூத்த பல வண்ண மலர்கள் போல் வண்ணக் கொடிகள்...மிகுதியும் செவ்வண்ணக் கோலங்கள் ...

கூட்டம் தெருவைக் கடக்குமுன் என்ன நேர்ந்ததென் : தெரியவில்லை. கோஷ அலைகள் சிதறுகின்றன. கற்கள் பாய்கின்றன. பச்சையின் நெற்றியில் ஒரு கூறிய கல் பாய்ந்து குருதிப் பொட்டிடுகிறது.

“எலே, பச்சை, வால..எல்லாம் வாங்க..வீட்டுக்குப் போவலாம்’ என்று பொன்னாச்சி கத்துகையில் காவல் துறையினர் கண்ணிர்க் குண்டுகள் வெடிக்கின்றனர். பீதியில் நடுநடுங்கிக் கூட்டம் சிதறுகிறது. பொன்னாச்சிக்கு கண்ணிர்க்குண்டைப் பற்றித் தெரியாது. கண்ணில் எரிய எரிய நீராய் வர, குழந்தைகளை அதட்டி இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஒடி வருகிறாள்.

“குண்டு போடுறாவil’

‘ஏலே, வால, போலீசு புடிச்சு அடிப்பாவl’ என்று. தாய்மார் விவரம் அறியாத பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். -

‘அக்கா, மாமா கொடி புடிச்சிட்டுப் போனாவ, பாத்தி யாக்கா...? தன் கணவனைத்தான் அவன் மாமா என்று: கூறுகிறான் என்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள்.

“நிசமாலுமா! எனக்கு ஆரும் ஏதும் புரியல!’ என்று கூறியவண்ணம் அவன் காயத்தில் அவள் மஞ்சளும் கண் ணாம்பும் குழைத்து வைக்கிறாள். எரிச்சலுடன் பொருட் படுத்தாத கிளர்ச்சி அவனுக்கு.

“குண்டு வெடிச்சாங்களே? அது ஆரையும் சாவடிக்ை தாம்! ஆனா கண்ணுல தண்ணியாக்கொட்டுது...எனக்குக் கூட அவியகூடப் போவணும்னு ஆச, ஏக்கா இழுத்திட்டு வந்திட்ட9’ - - -