பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 243

வானா வானா, நீ போனா இந்தப் பொடியெல்லாம்

போவும்...’ 1.

இந்த அமர்க்களங்கள் எதுவுமே தன் செவிகளில் விழாத

மாதிரியில் ஆச்சி கருமமே கண்ணாகப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள்.

நாட்கள் நகருகின்றன.

மாமனுக்கு இங்கு நிலைக்கவும் பொருந்தவில்லை. ஊரிலும் இருப்பா இல்லை. தங்கபாண்டியிடம் சண்-ை போட்டுத் தாலியைத் திரும்பப் பெறுகிறார். வாரி வைத்த உப்பை அவன் வண்டியிலேற்றிச் செல்கிறான்.

ராமசாமி எப்போதோ இருட்டில் கள்வனைப் போல் வருகிறான். அவசரமாகச் சோறுண்கிறான்: ‘வட்டுக் காரர். அளத்துல ஒரு பய்ல உள்ளவுடுறதில்லன்னு மாமுண்டி நிக்கியா, பனஞ்சோல அளத்துல சோல தொழியத்தெறிந்து உப்பெல்லாம் கலாமுலான்னு ஆக்கிட்டானாம். பய போலீசு. காவலுக்கு மீறி கடல்ல முக்குளிச்சிட்டே போயி மிசினத் தவராறு பண்ணிட்டேன்னா...வ்ேலக்கிப் போவ பயந்திட்டே அல்லாம் நின்னிடுவாங்க ஆனா, வெளியாளவுட்டா’ தொலஞ்சம். அதுதா கட்டுக் கோப்பா இருக்கணும். இப்ப அந்தக் கட்சி இல்ல. எல்லாரும் ஒரு கட்சி, ந்மக்கு ஒரு மனிசன்னு வேண்டிய தேவைங்களுக்கு உரிமை வேணும்...” .

கை கழுவ அவள் நீரெடுத்துக் கொடுக்கையில் சரட்டில் பொற்சின்னம் குலுங்குவதைப் பார்த்து விடுகிறான்.

so “ கொண்டாந்தா...’

இளமையின் தாபங்கள் . கட்டவிழ்கின் றன.

“தயிரியமா இருவுள்ள; நம்ம பக்கம் நியாயம் இருக்கு நா வார...’ கதவை திறந்து அவனை வெளியே செல்ல விடுவது மிகக் கடினமாக இருக்கிறது.

எண்ணெய் விளக்கில் திரிமட்டுமே எரியத் தொடங். கும் நிலை. ஆச்சி வீட்டு முற்றத்தில் கடனுக்குப் பெண்கள் வந்து மொய்க்கின்றனர். ஆச்சி 2.37 சென்று பெட்டி யைத் திறந்து ஐந்து, பத்து என்று எடுத்துக் கொடுக்கிறாள்.