பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கரிப்பு மணிகள்

பச்சையின் நெற்றியில் அன்று கல்பட்ட காயம் வீங்கிச் சிற்கோத்துக் கொள்கிறது. ஒலைப்பெட்டிகளைச் சந்தை யில் கொண்டு போட்டுவிட்டு வந்து நெற்றியைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறான்.

ஆச்சி ஒரு ரூபாயை அவனிடம் எடுத்துக் கொடுத்து. ‘பெரியாகபத்திரில் போயி எதானும் மருந்து போட்டுட்டு வாலே?” என்று அனுப்புகிறாள்.

அன்று காலையில் வான் இருள மழை மணிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொட்பொட்டென்று குதிக்கின்றன. பிறகு களிப்பும் கும்மாளமுமாகக் கதிரவ னுடன் விளையாடிக் கொண்டு காய்ந்த மண், வெய்துயிர்க்கப் படபடவென்று பொழிகிறது. தட்டுமேட்டு அம்பாரங்களை இப்போது எந்தக் குஞ்சும் வந்து தொடலாகாது. வங்கிக்கு ஈடுகட்டிய குவைகள் கரைந்து விடக்கூடும். அவற்றை: விற்று மூடைகளாக்க ஒரு சகாக்கை போகக் கூடாது. -

o, தங்கள் போராட்டம் வெற்றிப் பாதையில் செல்லும் எக்களிப்புடன் அவர்கள் பசியையும் மறந்து களில் கின்றனர். so o

சிவந்தகனி அன்று மாலை நான்கு மணியளவில் மூச்சி ரைக்க ஓடிவருகிறான். o i.

“பணஞ்சோல அளத்துல புது ஆள் கொண்டு லாரியோட உள்ளார போனாவளாம். ஒம்மாப்பிள, இன்னும் மொத்த பேரும் குறுக்க விழுந்து மரிச்சாவளாம். அடிதடியாம். மாப்பிளயைப் புடிச்சிட்டுப் போயிட்டாவளாம்.”

அவனுக்கு மூச்சிறைக்கிறது. அப்போது செங்கமலத்தாச்சி பூமி வெடித்துக் கிளம்பும் தொழுந்து போல் வெளியே வருகிறாள். ‘

என்னலே?"