பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 அரிப்பு மணிகள்

அவள் உப்பளத் தொழிலாளருக்குக் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறாள். ஒரு தீப்பந்தம் புயற் காற்றுச் சூறாவளி யில் பறந்து செல்வது போல் மணல் தேரியில் கம்பும் கையு மாக ஒடுகிறாள்.

அளத்துப் பொண்டுவள்ளம் வாங்க! வாங்க.டீ” டீக்கடைப் பக்கம் சில இளைஞர் நிற்கின்றனர். ஒருவன் கையில் டிரான்சிஸ்டர் வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கோ நடக்கும் பாரதிவிழா நிகழ்ச்சிகளை அது அஞ்சல் செய்து கொண்டிருக்கிறது. மாமா அருணாசலமும் அங்கே தான் உட்கார்ந்து இருக்கிறார்.

“அளத்துக்காரவுக வாரும் அக்கிரமத்தத் தட்டிக் கேக்க வாரும்!”

சிவப்புச் சேலையும் கம்புமாக யார் குரல் கொடுத்துக கொண்டு ஓடுகிறார்கள்?

அந்தக் கூட்டம் தேரிக் காட்டில் அவளைத் தொடர், விரைந்து செல்கிறது. மணலில் கால் புதைய அவள் முன்னே ஒட்டமும் நடையுமாகப் போகிறாள்... -

“ஆளுவளைக் கொண்டிட்டா வாரிய? வந்தது, வாரது ரெண்டில ஒண்ணு. பொறுத்திருக்கும் பூமி தேவியும் வெடிச்சிடுவால...! நாசகாலம் ஒங்கக்கா, எங்கக்கான்னு பாத்திடுவம் நா கற்பு பெசகிட்டேன்னு சாபம் போட்டு மவனவிட்டு ஆத்தாள வெட்டச் சொன்ன்ா. அந்த ஆத்தாதா ஆங்காரத் தெய்வமானா ஆங்காரத் தெய்வம்! எலே வாங்க! பனஞ்சோல அளத்துல ஆளெடுக்கிறாவளாம்! தடுக்க வாங்க!.. வாங்க...’ -

அந்த ஒலியைக் காற்று மணல் வெளியெங்கும் பரப்பு

கிறது. அருணாசலம் அங்கேயே நிற்கிறார். உடல் புல்லரிக்

கிறது.

பாண்டியன் அவையில் நியாயம் கேட்கச் சென்ற

கண்ணகியோ? பாரதியின் பாஞ்சாலி இவள் தானோ? இந்த அம்மை, இவள் யார்? ஆண்டாண்டுக் காலமாக வெறும்