பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 23

காரைக்கட்டு வீடுகளும் வருகின்றன. தென்னங்கிடுகுகளால் ஆன வேலிகளும், நித்திய மல்லிகைப் பூங்கொடியும் மஞ்சள் குங்கும வாயில் நிலைகளும் அந்த வீடுகளுக்குரியவர்கள் பொருளாதார நிலையில் சற்றே மேம்பட்டவர்கள் என்று உணர்த்துகின்றன. மாகாளியம்மன் கோயில் அங்கே நிலை பெற்றிருக்கிறது. -

அப்பால் பனஒலைக் கூரை வீடுகள் தெரிகின்றன. கரைக்கொடி படர்ந்த கூரைகள், மண் சுவர்கள், வென்று மணலில் விளையாடும் குழந்தைக் கோழிகள். மண்ணில் நிழல் கண்ட இடங்களில் குந்தி ஈருருவிக் கொண்டோ வம்பளந்து கொண்டோ இருக்கும்

பெண்கள். -

“அதா ஒரு புள்ள ஒரல்ல குத்திக்கிட்டிருக்குப் பாரு. அந்தவூடுதா. எனக்கு இன்னும் மேக்கே ஒரு கல்லுப் போல போவணும். நா அஞ்சு மணி பஸ்ஸுக்குச் சரியா வாரேன். நீ கடத்தெருவில் வந்து நில்லு...’ என்று கூறி சிவந்தகனி அவளைப் பையும் கையுமாக அங்கேயே விட்டுவிட்டுப் போகிறான்.

உரலில் கம்பு துவைத்து'க் கொண்டிருக்கும் பொன் ாைச்சி தங்களை நோக்கி வரும் பெண்பிள்ளை யாரோ என்று கூர்ந்து நோக்குகிறாள். அவளுடைய மாமி அப்போது அடுத்த வீட்டுக்காரியுடன் அவள் இறைத்த திணியை அயல் வீட்டுக் கோழி வந்து பொறுக்கித் தின்று விடுவது கண்டு

இரைந்து கொண்டிருக்கிறாள்.

‘சவங்க...இங்கெ வந்து அம்புட்டியும் தின்னுதீக்கு. அவவ கோளிய அடுத்துாட்டுக்கு வெரட்டிக் கொளுக்கவய்க் கிறாளுவ...’ என்று மாமி இரைகையில், எட்டு வயசுள்ள குமரவேலு சிரித்துக் கொண்டு, ‘யம்மா, அந்தக் கறுப்பு

கோளிய நாம ஒரு நா விருந்து வச்சிடுவம்...’ என்று கூறு கிறான். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/26&oldid=657502" இலிருந்து மீள்விக்கப்பட்டது