பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 35

அவருடைய கண்கள் சிவப்பாக இருக்கும். பெரிய மீசை வைத்திருப்பார். கட்டம் போட்ட லுங்கி உடுத்தியிருப்பார். அம்மாவை அடிப்பார். அவளையும் கூட அவர் அடித்து வெளியே தள்ளினார். ஒருநாள் இரவு, அந்த முட்செடியி லிருந்து தலைவிருச்சிப் பிசாசு ஒன்று துரத்தி வருவது போல் அவள் பயந்துபோய் அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

அந்த அப்பச்சி...அவரை அவள் பார்க்கப் போகிறாள். அவர் உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறார்.

‘சவத்தும்ாடன். அவனொரு மாப்பிள்ளை, இந்த வீட்டுக்கு!’ என்று மாமியின் நாவில் அடிக்கடி வசைக்கு: ஆளாகும் அப்பச்சியை அவள் பார்க்கப் போகிறாள். “அவ. தளுக்கும், மின்னுக்கும் கண்டிராக்டானாலும், கணக்கவுள்ள பானாலும் சீலயவுக்குறவ...’ என்ற ஏச்சுக்காளாகும் பென் பிள்ளையான சின்னாச்சி இன்று மாமியிடம் மரியாதைக்குரிய வளாக வந்து கூட்டிப் போகிறாள்.

அவள் உண்மையில் அப்படித் தளுக்கு மினுக்காகவே பில்லை. முடியை எண்ணெய் தொட்டுக் கோதிச் செருகி யிருக்கிறாள். புதுமை மங்கிய நீலச்சேலை, வெண்மையாகத் தான் பிறப்பெடுத்திருந்தேன் என்று சொல்லும் ரவிக்கை. முகத்தில் எலும்பு முட்டிக் கண்கள் குழியில் இடுங்கிக் கிடக்கின்றன. எப்படியிருந்தாலும் இடைவிடாத மாமியின் இடிச்சொற்களிலிருந்து அவர்களை விடுவித்திருக்கிறாள்

அவள்.

அவர்கள் வீடு வெளியிலிருந்து பார்க்கக் காரைக்கட்டுச் சுற்றுச் கவரும் வாயிலுமாக இருக்கிறது. வாயிலுள் துழைந்து எதிரே தெரியும் வீட்டைச்சுற்றி அவர்கள் செல் கின்றனர். அந்த முற்றத்தில் ஒரு முட்டைச் சிம்னி விளக்கை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிள்ளை கல்லுரலில் உளுந்து ஆட்டிக் கொண்டிருக்கிறாள். திண்ணை போன்ற மேட்டில் ஒரு ஆண் காலோடு தலை போர்த்த வண்ணம் உட்கார்ந்து இருமிக் கொண்டிருக்கிறான். அங்கேயே சில குழந்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/38&oldid=657526" இலிருந்து மீள்விக்கப்பட்டது