பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கரிப்பு மணிகள்

ஒடிப்பிடித்து விளையாடுகிறார்கள். வரிசையாக உள்ள வாயில் கதவுகளில் ஒன்று பூட்டிக் கிடக்கிறது. நேர் எதிரே உள்ள மூன்றாவது வாயிலை நோக்கி மருதாம்பா வருகிறாள். -

‘அப்ப நா வாரனக்கா?’ என்று கூறியவனாகச் சிவந்த கணி அங்கேயே விடைபெற்றுத் திரும்பிப் போகிறான்.

திண்ணையில் இங்கேயும் காலோடு தலை போர்த்த உருவம் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். -

சின்னம்மா வெறுமே சாத்தியிருக்கும் வாயிற் கதவைத் திறந்து சிம்னி விளக்கைத் தேடி ஏற்ற ஐந்து நிமிடங்களா கின்றன.

‘பிள்ளிய வந்திருக்காவ, எதே...ஒங்கப்பச்சி கும்பி டுக...’ -

பொன்னாச்சி, அந்தச் சிம்னி விளக்கொளியில் தந்தை யைப் பார்த்துக் குழம்பியவளாக நிற்கிற7ள். தாடியும், நாள் பறந்தாற் போன்ற முடியுமாக, அழுக்குத் துணியால் மேலும் கீழும் போர்த்திக் கொண்டு கும்பலாக அமர்ந்திருக்கும் இவரா அப்பச்சி...? -

கால்களைத் தொட்டுப் பணிவுடன் கும்பிடுகிறாள். பச்சையையும் கும்பிடச் சொல்கிறாள்.

“எங்க இந்தப் பிள்ளயவ? ஏட்டி, பாஞ்சாலி? சரசி: பாணயில பொட்டுத் தண்ணி இல்ல. குடி தண்ணியுமில்ல,

கொடத்துல. ஏலே நல்லகண்ணு? அக்காணெங்கேலே?”

ஆடிக்கொண்டிருந்த பையன் வருகிறான். “பாஞ்சாலி ஆச்சிகட சினிமாவுக்குப் போயிட்டு வந்தா. எனக்கு மிட்டாய் வாங்கித் தாரன்னியே?...’ என்று அவன் சேலையைப் பிடித்து இழுக்கிறான்.

‘தம்பியக் கூப்பிடு; இதப்பாரு பொன்னாச்சிக்கா, இது அண்ணெ....” என்று கூறிப் பொட்டுக் கடலையும் பழமும் கொடுக்கிறாள். அப்போது சரசி பிரிந்த தலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/39&oldid=657528" இலிருந்து மீள்விக்கப்பட்டது