பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 37

கிழிந்த பாவாடையுமாக வெளியிலிருந்து ஒடி வரு கிறாள்.

“பாஞ்சாலி வந்தா கூப்பிடுடீ பொட்டுத் தண்ணியில்லடி கேணிலேந்து ஒரு நடை தண்ணி கொண்டாரச் சொல்லுடி?...’ கயிற்றையும் வாளியையும், பானையையும் பாஞ்சாலி வந்து தூக்கிக் கொண்டு சென்றதும் உள்ளே விளக்குடன் நுழைகிறாள் மருதாம்பா. சற்றைக்கெல்லாம் திடுக்கிட்டவளாக அவள், ‘ஏளா, உள்ளாற யாரு வந்தது? நா. நேத்துதான் வெறவு வாங்கிப் போட்டுப் போன? ஒத்தக் குச்சியக் கூடக் காணம்?’ என்று கூக்குரலிடுகிறாள். ஆனால் அந்த ஒலம் எந்த எதிரொலியையும் கிளப்பவில்லை. கொடக் கொடக்கென்று. உளுந்துதான் மசிந்து கொண்டிருக்கிறது. பாறையில் முட்டி மோதி எதிரொலிக்கும் கடலலைபோல் அவள் மீண்டும் மீண்டும் ஓலமிடுவாள். அப்பன் எதுவுமே பேசவில்லை மருதாம்பா. சரசியின் முதுகிலும் நல்ல கண்ணு. வின் முதுகிலும் ஆளுக்கு இரண்டடி வைக்கிறாள்.

‘கதவைப் பூட்டிட்டுப்போன்னு சொன்னேனில்ல? மூதி தெருவுல ஆடப்போயிடறா! தொறந்த வீடுன்னா எந்த தாயும், களுதையும் எச்சிப் பொறுக்கவரும். சவங்க...’ என்று வசை பாடத் தொடங்குகிறாள்.

அவளுடைய சந்தேகத்துக்கு, அயல் பக்கத்துக்காரிகள் ஆளாகிறார்கள். அவள் சாடைமாடையாகச் சொன்ன பிறகும் மாவாட்டுபவள் கம்மா இருப்பாளா? மாவை வழித்து விட்டு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறாள் பொன்னாச்சி. இத்தகைய விறகுச் சண்டைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போனவள். ஒளிமயமான கனவு களைச் சரேலென்று மேகங்கள் மூடினாற்போல் ஒரு சோர்வு: ஆட்கொள்ளுகிறது. அவளுடைய அப்பச்சியை இவ்வாறு செயலிழந்த துணிச் சுருளாக அவள் கற்பனை செய்திருக்க வில்லை.

இரவு மருதாம்பா ஏதும் சமைக்கவில்லை. விறகு பறி” போய்விட்டது. ஆற்றாமையில் திண்ணையிலிருந்த புரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/40&oldid=657532" இலிருந்து மீள்விக்கப்பட்டது