பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 49

பணஞ்சோலை அளத்துல வேலக்கிச் சொல்லிருக்கா. நாளக்கிச் சின்னாச்சியக் கூட்டிட்டுப்போயி அட்வான்க வாங்கிக்குமின்னு சொல்றாவ. அம்பது ருவா குடுப்பாவ :ளாம்...’ என்று பூரிக்கிறாள்.

அப்பச்சியின் கண்டத்திலிருந்து கொப்புளம் உடைத் தாற் போல் விம்மல் ஒலிக்கிறது. அவள் தலையைக் காய்த் துப்போன கையால் தடவுகிறார். பேச்சு எழவில்லை.

அவள் மாகாளியம்மன்னை நினைத்துக் கொள்கிறாள்; திருச்செந்தூர் ஆண்டவனை நினைக்கிறாள். ‘மாமன் வந்து சண்டையொன்றும் போட்டுவிடக் கூடாதே...” என்ற, நினைப்பும் ஓடி மறைகிறது. முதல் கூலியில் ஒவ்வொரு ரூபாய் எடுத்து வைக்க வேண்டும்.

சின்னம்மா வீடு திரும்பும்போது நன்றாக இருட்டி. விடுகிறது ஒரு பெட்டியில் அரிசியும், விறகுக் கட்டுமாக அவள் வருகிறாள்.

கண்கள் ஆழத்தில் இருக்கின்றன. சுமையை இறக்கி விட்டு நீர் வாங்கிக் குடிக்கிறாள். o

‘எனக்குந் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலைக்குச் சொல்லியிருக்கா அந்தாச்சி. ந்ாளாக்கிக் கூட்டிப் போகச் சொன்னாவ. அட்வான்ஸ் தருவாகளாம்?”

“ஆரு வந்திருந்தா?’

‘ஒரு சுரத்த ஆளு. கடுக்கன் போட்டிருந்தா...”

‘சரித்தா முத்திருளாண்டி...”

‘அந்த அளம் நீங்க போறதாவுலதா இருக்கா சின்னம்மா”

‘இல்ல அன்னிக்கு பஸ்ஸில வந்தமில்ல? அங்கிட்டுப் போயி வடக்க திரும்பணும். அந்த அளத்துக்கு செவந்தியா புரம், சோலக்குளம் ஆளுவதா நெரயப் போவா. இங்கேந்து ஆருபோறான்னு பார்க்கணும்...’

வாழ்க்கை வண்ணமயமான கனவுகளுடன் பொன் வாசிசியை அழைப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கனவு களுடன் உறங்கிப் போகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/52&oldid=657557" இலிருந்து மீள்விக்கப்பட்டது