பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கரிப்பு மணிகள்

பகலில் உணவு கொள்ளும் நேரத்தில், ராமசாமி என்ற அந்த ஐட்ரா பார்க்கும் ஆள் அவளைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் உணவு கொள்கிறான்.

அவன் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. ஆனால், அவனுடைய பார்வை “பயப்படாதே, நான் இருக்கிறேன்’ என்று சொல்வது போல இருக்கும். -

அவன் தண்ணிர்க்குழாயில் நீரருந்துகையில் பச்சையிடம். “தண்ணி குடிச்சிக்கோ?’ என்று குழாயை ஒப்படைப்பது வழக்கமாகிறது.

“அவரு மாசச்சம்பளக்காரரா அக்கா மொதலாளிக்கு வேண்டியவியளா!’ என்று பச்சை பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறான்.

அதனால் தான் ம்ற்றவர் யாரும் சகஜமாக அந்த ஆளிடம் பேசிப் பழகுவதில்லையோ?

‘ஒனக்கு ஆரு சொன்னா’

  • அந்த டைவர் சொன்னா! அந்தாளோட அப்பச்சி முன்ன பெரிய முதலாளியக் கொலை செய்யறதுக்கு இருந்: தான்னு போலீசு கண்டுபிடிச்சி செயிலுக்குக் கொண்டு போயிட்டாவளாம். அப்ப இவிய ஆத்தா அளுத்திச்சாம். மொதலாளி எரங்கி இவாை வேலைக்கு வச்சாளாம். அப்பா இப்ப செத்துப் போச்சாம். இப்பம் மாசச் சம்பளமாம் ஆதர்ம் பவுருன்னு கருவிட்டுப் போறா அந்த டைவரு...”
  • நீ அந்தக் குடிகாரச் சவத்துங்கூடப் பேசாதே....’ என்று அவள் பச்சையை எச்சரித்து வைக்கிறாள்?

அந்தச் சனிக்கிழமை மாலையில் சின்னம்மா கூலி வாங்கி வருகையில் கருவாடு வாங்கி வந்திருக்கிறாள்.

கடுசோறு வடித்து நிமுர்த்துமுன் பச்சை சில நாட்களில் படுத்துவிடுகிறான். அவசரமாக வடித்து எடுத்து, ஒரு துவை யலை அரைத்து அப்பனுக்கும் குழந்தைகளுக்கும் பொன் னாச்சி சோறு போடுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/79&oldid=657615" இலிருந்து மீள்விக்கப்பட்டது