பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 75

எங்கோ தேநீர்க் கடையில் அரசியல் பேசிவிட்டு கடுசோறு தின்பதற்கு வந்து விடுகிறார்.

அன்று பெட்டியைத் தலையில் வைத்து அவள் நடக் கையிலே மாமனின் நினைவே தோன்றுகிறது. பெண் குழந்தைங்க புறாபோல, நம்ம வீட்டு பாதுகாப்பை விட்டு வெளியே அனுப்பக் கூடாது...” என்று வாய்க்கு வாய் பேக வார். மாமா எத்தனையோ நாட்கள் தூத்துக்குடிக்கு வருபவர் தாம் கயிறு வாங்கணும், இரும்பாணி வாங்கனும், தாசில்தாரைப் பார்க்கணும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பஸ் ஏறுவாரே, அவர் வரக்கூடாதா!

“அப்பனைப் பார்த்தாச்சில்ல; கிளம்பு?” என்று சொல்ல மாட்டாரா? சின்னம்மாவின் மக்கள் அவளிடம் யில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுக்கும் நெருங்கி உறவாட நேரம் இருக்கிறதா? -

வள்ளிக்கும் குஞ்சரிக்கும் அவள் தான் சடை பின்ன வேண்டும். ஒடைக் கரையிலிருந்து மாமா, தாழம்பூக் குலை கொண்டு வருவார். அவ கத்தி கத்தியாக வெட்டித் தைத்து விடுவாள். ஞானம், அவள் தட்டினால்தான் உறங்கு வாள். வேலு முன்பு வைத்திருந்தபோதுகூட அவனுக்குப் புத்தகமெல்லாம் தட்டி வைத்தாள். அவனுடைய சட்டை யையும் சராயையும் குளத்தில் சோப்புப் போட்டு அவசிக் கொண்டுவந்து, மூங்கில் கழியை நுழைத்துக் காயப் போடுவான். -

“பொன்னம்மா தோச்சா ப்ொட்டியே போடவாண்ாம்!” என்பான். அவன் பொன்னம்மா என்றுதான் அவளைக் கூப்பிடுவான். - -

அவன் பரீட்சைக்குப் படிப்பதற்கு அவள்ைத் தான் தேநீர் போட்டுத்தரச் சொல்லுவான். 1.

அந்த மாமன் வீட்டைவிட்டு அவள் அவர் இல்லாத போது வந்திருக்கலாமா?. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/78&oldid=657613" இலிருந்து மீள்விக்கப்பட்டது