பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கரிப்பு மணிகள்

“சின்னாச்சி...எனக்கு இந்தப் பணஞ்சோல அளம் ரொம்பப் பயமா இருக்கி...”

மன ஆற்றாமையின் சுமைகளில் மோதுண்டு சொற்கள் மெல்லப் பிரிகின்றன. சின்னமமாவோ, முத்துக் கொறிக்க வில்லை. பீடி. புகைக்கும் அப்பன், உணர்ச்சியை விழுங்கிக் கொள்வது போல் ‘அஹம்’ என்று கனைக்கிறார்.

‘ஒங்க கங்காணியிட்டச் சொல்லி, எனக்கும் ஒங்ககூட அளத்துல வேல வாங்கித்தாரும் சின்னாச்சி. ஒங்ககூட இருந்தா பயமில்லாத பதனமாயிருக்கும்.

இதற்குமேல் தனது சங்கடத்தைச் சூசகமாக உணர்த்த முடியாதென்று அவள் நினைக்கிறாள். இதற்கும் சின்னாச்சி எதிரொலி எழுப்பவில்லை.

அப்பன் பீடிக்காரல் பாய்ந்தாற்போன்று கனைத்து, தொண்டையைச் செருமிக் கொள்கிறார். மெள்ள எழுந்து சென்று வெளியே காரித் துப்புகிறார் பிறகு வந்து உட்காருகிறார், இத்தனை நேரமும் சின்னம்மா வாய். திறக்கவில்லை.

பொன்னாச்சி, ‘அந்தக் கண்டிராக்டு, மோசமா நடக்கா. நாளக்கி ஆபீசில போயிக் கூலி வாங்கிக்கணுமா’ என்று சங்கடத்தை வெளியிடுகிறாள்.

“ஆரு, நாச்சப்பனா? சவத்துப்பய, அவன் முழியப் புடுங்கித் தேரில போடணும். அந்தப்பய. ஒரு நேரக் கஞ்சிக்கு வக்கில்லாம இருந்தவ, பொண்டுவள கணக்க பிள்ளமாருக்குக் கூட்டிக் குடுத்துக்கொடுத்துத் திரியிறான். ஒம்மேல மட்டும் அவெ கய்ய வய்க்கட்டும்...”

அவர் முடிக்கவில்லை. பூமி பிளந்து குருதி கொப்புளித் தாற்போன்று சின்னம்மாவின் குரல் ஆங்காரமாக வருகிறது.

“ஆமா! என்னேயிiரு! முன்னபின்னக் கண்ட் ராக்டு கங்காணிச் சவங்க செய்யாததியா செய்யிறா அவெ? நீரு என்னேஞ்சிரு சீலயப் புடிச்சிளுத்துப் பதங் கொலய வய்க்கிறது கொஞ்சமா? வயித்துப் பசின்னு நாலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/81&oldid=657620" இலிருந்து மீள்விக்கப்பட்டது