பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 79

செவத்துக்குள்ளேந்து வெளியே வந்தா இந்த மிருவங்கதா இதுங்க சீரளிக்கிறதுதா...?”

தோலை நீக்கிச் சீழும் இரத்தமும் குழம்பும் புண்ணை? வெளிக்காட்டினாற்போன்று பொன்னாச்சி விக்கித்துப் போகி றாள். மருதாம்பாளின் முகத்தில் மஞ்சள் ஒளி நிழலாடுவது தெரிகிறது; கண்கள் பளபளக்கின்றன.

“ஏம் பேசாம இருக்கீரு? ஏ?...ஏ?...’ சோற்றுக்கையுடன் அவள் எழுந்து வெறிபிடித்தாம் போன்று அவன் மேலே போட்டிருக்கும் துணியுடன் கழுத்தைப் பற்றுகிறாள்.

குரூரம் கெக்கலி கொட்ட அவள் பொங்கெழுச்சி கண்டு அப்பன் அதிர்ச்சியுற்று ஆவியாகப் போகிறார். அவள் கையைப் பிடித்துக்கொண்டு, வாணா...வாணா மருதாம்பா, என்னிய விட்டிரு.” என்று கெஞ்சும் குரல் அழுகையாகத் தழுதழுக்கிறது.

“இருட்டில வந்து தட்டுமேட்டுல லாரின்னு கொரல் குடுப்பா. உள்ளாற வந்து சீலயப்புடிச்சி இளுத்திட்டுப் போவா. புருசனாம் புருசன், அவ ஒடம்பில ரத்தமா ஒடிச்சி? இவ சில யப்புடிச்சு இளுத்திட்டுப் போவையில பாத்திட்டு ஒக்காந்திருப்பா, காலம் வந்ததும் கட்டயெடுத்திட்டு அடிச்சுக் கொல்லுவான், பாவி, ஊரம்புட்டும் பாத்திட்டிருக்கும் நாச காரக்கும்பல்...’ -

பொன்னாச்சிக்கு அந்தச் சிற்றம்மையைக் கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.

இந்த அப்பனைக்கூட அவ்வளவுக்கு யாரும் துாற்றிய தில்லை; ஏசியதில்லை. ஆனால், கண்ணால் பார்த்திராத இந்தச் சின்னம்மாவை எவ்வளவுக்கு யார் யாரோ ஏசியிருக் கின்றனர்! அப்பனின் குரல் அழுகையிழைபோல் இருட்டு குகையில் ஒன்றி மறைகையில் சின்னம்மா குரல் உடைய விம்முகிறாள்.

இந்தச் சின்னம்மாவும் ஒரு காலத்தில் பொன்னாச்சியைப் போல் உதயத்தில் இதழ் விரிக்கும் மலராக எதிர்காலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/82&oldid=657622" இலிருந்து மீள்விக்கப்பட்டது