பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 81

விலக்கிய ஒரே ஆள்.

அவரும் அந்தப் பாத்திக் காட்டில்தான் இருக்கிறார். உப்புக் கடலினால் கரிப்ப் மணிகள் மட்டுமே விளையவில்லை. நல்முத்துகூட விளைகிறது. ஆனால் அது அருமையானது. அதனால் விலைமதிப்பற்றது.

மறுநாட் காலையில் சின்னம்மா, பச்சையையும் அப்பனையும் அனுப்பி அவளுடைய கூலியைப் பெற்றுவர செய்கிறாள். ஞாயிற்றுக் கிழமையில் நல்ல தண்ணிர்க்குளம் தேடிச்சென்று துணி துவைத்து வருகிறார்கள்; அன்றுதான் மாசத்துக்கொரு முறையான எண்ணெய்த் தலை முழுக்கும். வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலைக் கோதிக்கொண்டு அவள் சன்னலின் அருகே நிற்கையில் ஒலை கிழித்துக் கொண் டிருக்கும் வீட்டுக்கார ஆச்சி,

“ஏட்டி? கூலி போடலியா நேத்து?’ என்று வினவு கிறாள்.

‘இல்ல. அப்பச்சியும் பச்சையும் போயிருக்கா?”

“அதாங் கேட்டே. காலையில் சின்னாச்சி வாடவையும் சிட்டுப் பணமும் குடுத்திடுவா. காணமேன்னு கேட்டே...”

பொன்னாச்சிக்கு அவள் வாடகைப் பணத்தை நினைவு படுத்தும் மாதிரியில் கோபம் வருகிறது. என்றாலும் எதுவும் பேசவில்லை. இவளுடைய ஒரே பையனும் மூன்று வருஷங் களுக்கு முன் இறந்து போனானாம். வட்டிக்குக் கொடுக்கும் பணத்தைக் கண்டிப்பாக வாங்கி விடுகிறாள். a

அவளிடம் உப்பளத் தொழிலாளரின் பாத்திரங்கள், நீர் குடிக்கும் லோட்டாவிலிருந்து சருவம் வரை அடகு பிடிக்கப் பட்டவை கிடக்கின்றனவாம். அந்த முன்னறைக்கு நேராக உள்ள அறையில் இரும்பு அலமாரியும் கட்டிலும், சாமான் களும் நிறைந்திருப்பதை பாஞ்சாலி அவளிடம் சொல்லி வியந்தாள். ரோசத்துடன் சின்னம்மாவிடம் அப்பனும் பச்சையும் கூலிபெற்று வந்த உடனேயே அவள் கடனுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/84&oldid=657626" இலிருந்து மீள்விக்கப்பட்டது