பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கரிப்பு மணிகள்

அவள் பிறகு தேநீரை வாங்கி அருந்துகிறாள், தனது ஆயுளில் அத்தகைய இனிமையை அநுபவித்ததில்லை என்று தோன்றுகிறது.

அவர் வீட்டுப்படி ஏறியதும் மாமன் வந்திருக்கும் குரல் கேட்கிறது.

இப்பதா வாரிங்களா? இந்நேரமா ஆவுது? எட்டடிக்கப் போவுது?’

“இன்னுக்கு அளத்துள ஒரு பொம்பிள, புள்ள பெத்திட்டா’ என்று செய்தியவிழ்க்கிறான் பச்சை. .

ஆப்புறம்?...” என்று மாமா வியந்து பார்க்கிறார்.

எல்லாரும் வேலையவுட்டுப் போட்டு வேடிக்கை பாத்திட்டு நின்னிட்டா கண்டிராக்ட் வரப்பு உப்பு தட்டு மேட்டுக்குப் போவாமவுட மாட்டேனிட்டா” என்று கூறும் பொன்னாச்சிக்கு சட்டென்று நினைவு வருபவளாக, நீங்க எப்ப வந்திய மாமா, மாமி, பிள்ளையள்ளாம் செrவமா? ஞானத்தைதன்னாலும் கூட்டி வரப்படாதா?’ என்று வினவு கிறாள்.

அவள் பரபரப்பாகப் பேசியே கேட்டிராத மாமாவுக்கு அவள் முற்றிலும் மாறிப் போயிருப்பதாகத் தோன்றுகிறது.

ா நானிங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தேன். யாரும் இல்ல. பெறகு வீட்டுக்கார ஆச்சி சொன்னாவ. நீங்க வர ஆறு மணியாவுன்னு. ஒங்க மாமி சொன்னா, அவப்பச்சிக்கு ஒ-ம்பு சரியில்லன்னு கூட்டிப் போனான்னா, சரி. ஒடம்பு நல்லானதும் வந்திடுவீங்கன்னு இருந்தேன். பிறகு இன்னிக்கு இங்க வர சோலி இருந்தது. சுசய்ட்டி வி, விமர் வந்தா நீங்க வேலய்க்கிப் போயிருக்கிய...” பொஸ்னாச்சிக்குத் தான் குற்றவாளியாக நிற்பதாகத் தோன்றுகிறது.

நீங்க தப்பா நினைச்சுக்க வேண்டாம் மாமா. இங்க சின்னம்மாக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எத்தினி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/93&oldid=657644" இலிருந்து மீள்விக்கப்பட்டது