பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

எங்கள் பாட்டனார் எண்பது ஊர்களுக்கு ஜமீன்தாராம். எங்கள் தகப்பனார் முதல் முதலாக முதல் மந்திரி பதவி வகித்தாராம். இளமையிலே என் கால்கள் தரையிலேயே பட்ட தில்லையாம்’.

‘ஏன், கால் அடியிலே ஏதாவது புண் இருந்ததா சர்வ ஜீரணானந்த சுவாமிகளே! கால்களைத் தரையிலே வைக்கமுடியா தென்றால், உங்கள் தலை மேலேயே வைத்துக் கொண்டு இருந்திருப் பீர்களோ?'

‘இல்லை சுவாமி! அவ்வளவு செல்லம் எனக்கு. என்னை யாரும் நடக்கவிட மாட்டார்களாம். ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிவைத்துக் கொண்டேயிருப்பார்களாம். எங்கே செல்வதா யிருந்தாலும் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டிதானாம்! என் உடம்பு முழுதும் வைர நகைகளாம். நான் நகைகளைக் கழற்றி எறிந்து காகத்தை ஓட்டுவேனாம். இப்போது என்னடா என்றால், ஒவ்வொரு வீட்டு வாசற்படியிலும் பையன்கள் கல்லைப் போட்டு என்னை ஓட்டுகிறார்கள்-எல்லாம் என் தலைவிதி!’

இவ்வாறாக, தம் முன்னோர்களின் செல்வ வாழ்க்கையை ஒன்றுக்கு ஒன்பதாகப் பெருக்கிச் சொல்லிப் பழம் பெருமை பேசித் திரிவோர் பலர். அடுத்து, மறுபக்கம் திரும்பினால், மாடசாமியவர்கள் தம் இளமைக்காலத்து மறச் செயல்களைப் படிமரக்கால் போட்டு அளக்கிறார்:

‘என்ன-இந்தக் காலத்துப் பையன்கள் புல் தடுக்கினால் விழுந்து விடுகிறார்கள். கிழவர்கள் போல் கூன் வளைந்து-கன்னம் குழி விழுந்து பார்க்கப் பரிதாபமாக இருக்கிறார்கள். ஒரு பர்லாங்கு தூரம் கூட இவர்களால் நடக்க முடியவில்லை. அந்தக் காலத்திலே நான் சிறுவனாயிருந்தபோது எப்படி யிருந்தேன் தெரியுமா? எங்கள்