உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

 ருப்பதுஎன்று பொருளாம். ஒவியத்திற்கு ஒவு, ஒவி, ஒவம் ஆகிய பெயர்களும் இலக்கியங்களில் உள்ளமை குறிப் பிடத்தக்கது.

(6.அ) சர்க்கரையின் இனிப்புச் சுவையைப் பல்வேறு இனிப்புப் பண்டங்களில்-பல்வேறு மாதிரிகளில் காண்பது போல, ஒப்புமைக்கலையைப் பல்வேறு கலைகளில்-பல்வேறு உருவங்களில் காண்கிறோம். அன்பே கடவுள்’ என்பது போல ஒப்புமையே கலைகள்’ என்று கூறிவிடலாம்போல் தோன்றுகிறது.

கருவிக்கலை (Tool Art):

(7) பேச்சுக்கலை, இலக்கியக்கலை, கற்பிக்குங்கலை முதலிய கலைகளின் வெற்றிக்கு ஒப்புமைக்கலை தக்க கருவியாய்ப் (ஆயுதமாய்ப்) பயன்படுகிறது. பேச்சாளரோ, எழுத்தாளரோ, இலக்கியப் புலவரோ, பாடம் பயிற்றும் ஆசிரியரோ, ஒப்புமைக்கலையின் உதவியின்றித் தம் தொழி லில் வெற்றி காணலரிது. இக்கலைஞர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தை விளக்க, காலத்தோடு காலம்-இடத்தோடு இடம் -ஆளோடு ஆள்-பொருளோடு பொருள்-நிகழ்ச்சியோடு நிகழ்ச்சி ஆகியவற்றை ஒப்பிட்டுக்காட்டித் தம் தொழிலில் உயர்வு பெறுகின்றனர். எனவே தான், ஒப்புமைக்கலை ஒரு கருவிக்கலை’ எனப்படுகிறது.

வாழ்க்கைக் கலை:

(8) உயிர் வாழ்க்கையே ஒப்புமைக்கலையின் அடிப்படையின் மேல்தான் நடக்கிறது. குழந்தைகள் பிறரைப் பார்த்துப் பின்பற்றி அவர்கள் செய்வதுபோல் செய்து தான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர் களுங்கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ்கின்றனர்.சூழ்-