பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

நிலையின்உணர்வைத் தாமும் கொள்ளும் 'ஒத்துணர்வு’ (Sympathy), பிறர் குறிப்பறிந்து அவர் விரும்புவதுபோல் நடக்கும் குறிப்பறிதல்’ (Suggestion), பிறர் நடப்பதைப் பார்த்து அதுபோலவே நடக்கும் பின்பற்றல் (Imitaiton), பெரியவர்கள் உண்மையாகச் செய்வதைப் பார்த்துக் குழந் தைகள் தாமும் அதுபோல் கற்பனையாக விளையாடும் விளையாட்டு (Play) ஆகியவற்றை உளவியலார் (Psychologists)உள்ளத்தின்பொதுப்போக்குகள் (GeneralTendencies) எனக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பொதுப் போக்குகளின் தொகுப்பே வாழ்க்கை எனலாம், உயிர்வாழ்க் கையின் அடிப்படையாகிய இந்தப் பொதுப் போக்குகட்கு அடிப்படை ஒப்புமைக்கலையே. எனவே, ஒப்புமைக்கலை வழிகாட்டும் வாழ்க்கைக் கலையாகும்.

(9) இதுகாறுங் கூறியவற்றால், ஒப்புமைக்கலையின்றி வேறு கலைகள் இல்லை என்பது மட்டுமன்று; ஒப்புமைக் கலையின்றி உயிர்வாழ்க்கையே இல்லை-உலக நடை முறையே இல்லை என்பதும் வெளிப்படை.

2. தமிழில் ஒப்புமைக்கலை

ஒப்புமைக் கலையின் தொன்மை

(10) இன்னும் உலகில் எத்தனையோ மொழிகட்குச் சொந்த எழுத்துகூட இல்லாத நிலையில், இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்டு முன்பே, அனைத்தும் தானாக உள்ள ஒப்புமைக்கலை தமிழ் மொழியில் பெற்றுள்ள-நம்ப முடியாத ஆனால் உண்மையான பெருவளர்ச்சியை எண் ணும் போது வியப்பினால் மெய்சிலிர்க்கிறது. இதுவரை முழு உருவில் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் முதன்மையானது தொல்காப்பியர் இயற்றியதொல்காப்பியம் ஆகும்.