186
மன்றாடுதல்:
அழகிய நடராசர் சிலையை அமைத்து வைத்துக் கொண்டு, அதன் எதிரே ஆடல்கலை பயின்றனர். பயிற்றினர்-வளர்த்தனர். வேறிடங்களில் ஆடல்கலை பயின்றவர்களும், இந்த அம்பலத்தில் வந்து அரங்கேற்றம் செய்து கொண்டனர். இதனை, அறையில் ஆடிப் பழகிய பின்னரே அம்பலத்தில் ஆடவேண்டும்’ என்ற பழமொழியாலும் உய்த்துணரலாம். அரங்கேற்றத்தோடு நின்று விட்டதா? ஆடல் கலைஞர்கட்குள்ளே, மன்றத்தில் ஆடல் போட்டி களும் நடைபெறலாம். இஃது இயற்கைதானே! சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடைபெற்றதாமே. தோல்வி காளிக்குத்தானாம். மன்றில் நடைபெறும் ஆடல் போட்டி உயர் கட்டம் அடைவதுண்டு. வெற்றி-தோல்வி பற்றிய முடிவு பரபரப்புத் தருவதுண்டு. சொற்போர், விற்போர், மற்போர் என்பன போல, மன்றங்களில் ஆடல்போர்ஆடல் போராட்டம் நடைபெற்றது. இதிலிருந்துதான் மன்றாடுதல் என்னும் தொடர், போராடுதல் என்னும் பொருளுக்கும் மாறியிருக்கவேண்டும்.
மன்றம்-சிதம்ப்ரம்: .
நாளடைவில், கலை நிகழ்ச்கி நடைபெறும் இடங்களும் பலர் கூடும் பொது இடங்களும் வழக்காடும் இடங்களும் மன்றங்கள் எனப்பட்டன. இவற்றிற்கெல்லாம். அடிப்படையாக இருந்த முதலிடம், ஆடல் அரங்கு நடை பெற்ற மன்றம் என்னும் பெயருடைய இடமேயாகும். இந்த மன்றம் முதல் முதலில் சிதம்பரத்திலேயே சிறப்புற்றிருந்தது. அந்தக் காலத்தில் மன்றத்திற்குச் செல்கிறேன் என்றால், சிதம்பரம் செல்கிறேன் என்று பொருளாம். இன்று அந்த வட்டாரத்தில், பல்கலைக் கழகத்திற்குச்