பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

“ஆம்”

"அப்படியென்றால் உனக்கு இந்தத் தொழில் பிடிக்கவில்லை-அவ்வளவுதானே?”

“ஆம், நான் நல்லவர் ஒருவரை மணந்து கொண்டு குடும்பம் செய்யவே விரும்புகிறேன். வருகிற வண்டுகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து வாடி வதங்க விரும்பவில்லை. எனக்கு நிலையான வாழ்வளிப்பவரே நான் வணங்கும் தெய்வம்".

கலாவின் கண்டிப்பான பதில், சேதுநாதனுடைய அடங்காத ஆசையின் வன்சிறகை அறுத்தெறிந்து, அவரைச் சிந்தனையில் ஆழ்த்தியது. அவர் எண்ணம் அவரது சொந்தக் குடும்பத்தைச் சுழன்றது.

மணமாகிப் பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. தம் மனைவி மரகதவல்லிக்கு எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்து விட்டார்; ஒன்றும் பயனில்லை. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படிச் சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் அவருக்கு விருப்பந்தான் ஆனால் மரகதவல்லி ஒத்துக் கொண்டால்தானே. இனி மேல் தனக்குக் குழந்தை பிறக்கக் கூடும் என்று சொல்லிச் சொல்லி அவள் கணவனது ஆசையை மட்டந்தட்டிக் கொண்டு வருகிறாள். போதாக் குறைக்குத் தன் தம்பியைத் தத்து எடுத்துக் கொண்டு கல்லூரியில் படிக்க வைக்கிறாள். இந்த நிலையில் கணவன் எவ்வாறு இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்க முடியும்?

குடை சாய்ந்திருந்த சேதுநாதனது ஆசை இப்போது நிமிர்ந்து விட்டது. அழகி கலாவை இழக்க அவர் மனம்