பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


வர்த்தி வாசகப்பாவோ, (வசன) உரையாடலே இன்றி, முற்றிலும் இசைப்பாடல்கள் மட்டுமே கொண்ட இசை நாடகம் ஆகும். இந்நூல், சிறியனவும் பெரியனவுமாக 1172 இசைப்பாடல்கள் கொண்டதொரு பெரிய நூலாகும்.. இசை நாடகம் அன்று ‘வாசகப்பா’ என அழைக்கப் பட்டது போலும்.

ஒரு சோறு பதம்

பெரியசாமிப்புலவரின் இலக்கியநயத்தின் மாதிரிக்காக மயிலக் கலம்பகம் என்னும் நூலிலிருந்து மறம்’ என்னும் தலைப்புடைய ஒரு பாடல் சோற்றைப் பதம் பார்ப்போமே. மறவர் குலத்தில் பெண் கேட்டுவர அரசன் அனுப்பிய தூதனிடம், அரசனுக்குப் பெண் கொடுக்க முடியாதென மறவர்கள் மறுத்துரைப்பதாக உள்ள பாடலே ‘மறம்’ என்பது. இனிப் பாடல் வருமாறு:

“மட்டில்லா மகிமையுடன் நாளும் ஓங்கு
     மயிலவரை வரைவாழும் மறவர் நாங்கள்
சட்டியிலே கொக்கவித்த மறவனாம்வேள்
     தனக்கெங்கள் குலத்துதித்த மின்னை ஈயாது
இட்டமுடன் வளர்த்த பொன்னைக் கொடுப்பதற்கே
     எவ்வளவோ போர்செய்தோம் இறைவன் தூதா
வெட்டிமிளிர் பூவரசை வேலால் வைப்போம்
     விளம்பு பெண்ணை வினவியஉன் வேந்தனுக்கே”.

அதாவது, 'சட்டியிலே கொக்கு அவித்த மறவனாகிய முருகனுக்கேகூட, நாங்கள் பெற்ற பெண்ணைக் கொடாமல், வளர்ப்புப் பெண்ணாகிய வள்ளியையே, அதிலும் பெரிய போராட்டத்திற்கிடையே கொடுத்தோம். எனவே, எங்கள் பெண்ணைக் கேட்டால், நாடாளும் அரசரை வேலால் வெட்டி வீழ்த்துவோம்’-என்பது பாடலின்