பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

பொருள்-இடிபாடுகளைக் கொண்டு அறியப்படும் வரலாறு இது போன்றதேயன்றோ?

இத்தகைய ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டே வரலாற்றாசிரியன் வரலாற்றை விழிப்புடன் கணிக்கின்றான். ஆதார வேர் மூலங்களைக் கொண்டு செய்திகள் அறியப்படும் காலம் 'வரலாற்றுக் காலம்’ (Historical Period)எனப்படுகிறது. இத்தகைய ஆதாரங்களுள் யாதொன்றும் கிடைக்கப் பெறாமையால் உலகைப்பற்றி யாதொன்றும் அறியப்படாததான-மிகவும் பழைய இருட்காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்(Pre-Historical Period) எனப்படுகிறது. இவற்றிற்கு இடைப்பட்ட புதிய கற்காலம் -பழைய கற்காலம் எனப்படும் கற்கால மெல்லாம் (Stone Age) கற்பனையால் உருவாக்கப் பட்டனவேயாகும். இவற்றை (“Imaginatory Divisions ) என ஆங்கிலத்தில் கூறுவர்.

இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், முறையாக எழுதாமல் விட்டுப்போன பழைய வரலாற்றுச் செய்திகளை அறிய உதவும் கருவிகளுள் (சாதனங்களுள்) தலை சிறந்ததாகத் திகழ்வது இலக்கியமேயாகும். எத்தனையோ வரலாற்றுச் செய்திகளை அறிந்துகொள்ள இலக்கியங்கள் பெருந்துணை புரிகின்றன.

இலக்கியங்களில் வரலாறு முறையாக-முழுமையாகச் சொல்லப்படாமல், வரலாறு தொடர்பான சிற்சில குறிப்புகளே காணப்படுவதால், இலக்கியத்தில் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் தலைப்பு நமது கட்டுரைத் தலைப்பாக அமைந்திருப்பது பொருத்தமே.

அடுத்த கட்டமாக, பொதுவாக உலக வரலாற்றைப்பற்றிப் பேசுவதை விடுத்து, சிறப்பாகத் தமிழக வரலாற்றிற்கு வருவோ மாயின், நமக்குப் பெரிய ஏமாற்றமே காத்துக்