பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

எழுதினால், அது ‘அத்தை-பாட்டி கதை' என்றல்லவா அழைக்கப்படும்? எழுதுவதற்குச் சான்றாகத் தகுந்த வேர் மூலங்களை (Sources) வைத்துக் கொண்டே வரலாற்றாசிரியன் எழுதுகோல் பிடிக்க முடியும். வரலாற்று நிகழ்ச்சிகளை அறியக் கிடைத்துள்ள வேர் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை மூன்று வகைப்படுத்திக் கூறுவதுண்டு. அம்மூன்றையும் பார்ப்போமே!

ஒன்று: பட்டப் பகலில் நடந்த வரலாறு; இரண்டு: வைகறையில் பணி மூட்டத்தில் நடந்த வரலாறு; மூன்று: அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு-என்பன அவை. பட்டப் பகலில் நடந்த வரலாறு எனப்படுவது, ஆண்டு - திங்கள் -நாள்- கிழமை- நேரம்-இடம் -ஆட்கள்-நடந்த நிகழ்ச்சி-முதலிய அனைத்தையும் நன்கு தெரிந்து இந்தக் காலத்தில் முறையாக எழுதிப் படிக்கும் வரலாறாகும். பட்டப்பகலில் நடப்பது நன்றாகத்தெரியும் அல்லவா? அது போன்றது இந்த முதல் வகை. அடுத்து,-வைகறையில் மூடு பணியில் நடந்த வரலாறு எனப்படுவது: முறையாகத் தெரிந்து எழுதி வைக்கப்படாமல், இலக்கியங்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டு ஒரு தோற்றமாக (உத்தேசமாக) நுனித்துணர்ந்து (யூகித்து) எழுதிப்படிக்கும் வரலாறாகும். ‘வைகறையில் பனி மூட்டத்தில் வருபவர் போபவரோ-நடக்கும் நிகழ்ச்சிகளோ தெளிவாகத்தெரிய முடியா தல்லவா? இலக்கியத்தில் உள்ள குறிப்புகளைக் கொண்டு தெரிந்து கொள்ளும் வரலாறு இது போன்றது தான். இறுதியாக, அமாவாசை நள்ளிரவில் நடந்த வரலாறு எனப்படுவது: புதை பொருள்கள்-அகழ்வாராய்ச்சிகள்-இடிபாடுகள் முதலிய தடயங்களைக் கொண்டு உறிஞ்சி எடுக்கப்படும் வரலாறாகும். அமாவாசை நள்ளிரவில் விளக்கு இல்லாத இடத்தில் பொருட்களைத் தடவிப் பார்துத்தானே தெரிந்து கொள்ள முடியும்? புதை-