உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல் காப்பியமும் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணுற்று நாற்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது உத்தர மதுரை என்ப.

மேலே தந்துள்ள இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர் எண்ணிக்கையையும் ஆண்டு எண்ணிக்கையையும் அறியும் போது தலை சுற்றுகிறது. என்றாலும், நமக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற சில உண்மைகள் இப்பகுதியில் இல்லாமற் போகவில்லை. இந்த உரைக் கணக்கின்படி நோக்கின், இற்றைக்கு 3650 ஆண்டுக்கு முன் கடைச் சங்கமும், இற்றைக்கு 7350 ஆண்டுக்குமுன் இடைச் சங்கமும், இற்றைக்கு 11790 ஆண்டுக்கு முன் தலைச் சங்கமும் தோன்றியிருக்க வேண்டும். அதாவது. ஏறக்குறைய இற்றைக்குப் பன்னிராயிரம் (12,000) ஆண்டுகட்கு முன்பே சங்கம் அமைத்துத் தமிழ் ஆராயப்பட்டது என்பது புலனாகும். அங்ஙனமெனில், பன்னீராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் சிறந்த நூல்கள் தோன்றியிருந்த உண்மை, தானே விளங்கும். ஆனால், தலைச் சங்க இலக்கியங்களும் இடைச்சங்க இலக்கியங்களும் கிடைக்காமையால், தமிழ் நாட்டின் மிகப் பெரிய வரலாற்றை அறியும் வாய்ப்பை அந்தோ நாம் இழந்து விட்டோம். ஓரளவு நமது நற் பேறாக, கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த அல்லது சார்ந்த இலக்கியங்கள் சில மட்டுமே கிடைத்துள்ளன. அவை எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளா-