பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

எந்தக் கடவுளரையும் விதந்து-சிறப்பித்துக் கூறவில்லை. பொதுவாகத் தெய்வம்-கடவுள் என்னும் பொருளிலேயே எல்லாக் குறள்களையும் அமைத்துள்ளார். இத்தகு பொதுத் தன்மைகளால்தான் திருக்குறள் 'பொது மறை' எனப்படுகிறது.

இதே கொள்கைகளை வள்ளலாரும் ஆணித்தரமாக அறைந்துள்ளார். குறள்களின் விரிவுரையாக - விளக்க உரையாக, 'ஒன்றே குலம்-ஒருவனே தேவன்’ என்ற உண்மையை வள்ளலார் வலியுறுத்தி யுள்ளார். இதோ அருட்பாப் பகுதிகள் சில:- -

‘'சாதியும் மதமும் பொய் யென
ஆதியுணர்த்திய அருட்பெருஞ் சோதி”

"மதமெனும் பேய்பிடியா திருக்க வேண்டும்"-

"இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு"-

"பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம்
பேய்பிடிப் புற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டென
உணர்ந்திடா துயிர்கள் பலபேதமுற் றங்குமிங்கும்
போருற் றிறந்து வீண்போயின"-

‘எவ்வகைசார் மதங்களிலே பொய்வகைச் சாத்
திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வ
மென்று
கைவகையே கத்து கின்றீர் தெய்வம் ஒன்றென்
றறிவீர்”-
“ஒன்றெனக் காணும் உணர்ச்சி என்றுறுமோ”