பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

மேற்கூறிய பாடல்களினால், வள்ளுவரைப் போலவே, வள்ளலாரும் சாதி சமயச் சழக்குகளைச் சாடி, “ஒன்றே குலம்-ஒருவனே தேவன்" என்னும் உண்மையை நிலை நாட்டி, ஒருமை நன்னெறி இயக்கம் பரப்பியுள்ளமையை உணரலாம்,

அடுத்து,-பலர்க்கும் பகுத்தளித்து உண்ண வேண்டும்; பிறர் பசி போக்கவேண்டும்; விருந்தோம்ப வேண்டும்; விருந்தோம்புபவர்க்குப் பசி, வறுமை போன்ற எந்தக் கெடுதியும் வராது; அவர் குடும்பம் மேன்மேலும் ஓங்கும்; அவர் நிலத்தில் விதைக்காமலேயே விளைவு பெருகலாம்; விருந்தோம்பியவரைத் தேவரும் யாவரும் போற்றுவர்முதலிய கருத்துகளை ஒப்புரவறிதல், ஈகை, விருந்தோம்பல் முதலிய பகுதிகளில் உள்ளத்தைத் தொடும்படி மிகவும் உருக்கமாகக் கூறியுள்ளார் வள்ளுவனார்.

இத்தகைய கருத்துகளை வள்ளலாரவர்கள் பல பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளிலும் மிகவும் உள்ளம் நெகிழ்ந்து உரைத்துள்ளார்.

“உள்ள லேன் உடையார் உண்ணவும் வறியார்
உறுபசி உழந்துவெந் துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
மற்றிதை நினைத்திடுந் தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்"-

"பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது
அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்"

என்பன வள்ளலாரின் வாய்மொழிகள். ‘சீவகாருண்ய ஒழுக்கம்’ என்னும் உணரநடைப் பகுதியிலே, வள்ளலார்