உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அதற்குள் வெறுங்கையுடன் — ஆனால், துப்பாக்கியுடன் திரும்பிவிட்டார் பெரியவர். “புறப்படலாமா தம்பி ?” என்று கேட்டார்.

“ஒ...எஸ் !” என்றான் அவன்.

குழலியின் இவ்வாண்டுப் பிறந்த நாள் விழாவைத் தம் பங்களாவிலேயே வைத்து நடத்தும்படி கோரினார் அவர்.

அந்த அம்மாள் வெகு நேரம் சென்று இணக்கம் தெரிவித்தாள்.

வணக்கம் தெரிவித்துத் திரும்பினான் ஞானபண்டிதன். அப்பொழுது, புன்னகை கோலமிட, வலது கன்னத்து மச்சம் பளிச்சிட, குழலி கைகூப்பி அஞ்சலி செலுத்தி நின்றாள். அவனும் பதில் வணக்கம் செய்து திரும்பிஆன். அப்போது அவன் பார்வையில் தற்செயலாகப் பட்டாற்போன்று ஒரு நினைவு முகமும் விழுந்து விலகியது.

அது, பூவழகியின் ஆசைமுகம் !