பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாசத்தின்
கதைகள்
இரண்டு !

பால்வாய்ப் பசுந்தமிழின் மறுமலர்ச்சி இலக்கியம் கிளையும் கப்புமாகச் செழித்துத் தழைத்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் மகிழ்ச்சிக்குரிய - வரவேற்புக்குகந்த பொன்னான நேரம் அல்லவா இது ...?

ஆம் : அட்டி இல்லை ;

அட்டி சொல்லுபவர்கள் எட்டி நிற்கட்டும் !...

‘புதினம்’ என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் போது, 'புதினம் என்பது சமூகத்தின் ஆன்மா' என்று அடிக்கடி நான் குறிப்பிடுவது உண்டு. உண்மை நிலையும் அதுவேதானே?

"பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்!" என்று பாடினான் பாரதி. அவன் வாக்கு, புதினத்துக்கும் பொருந்தும் ; பொருத்தம் சொல்லும்!

'ஒரு நாட்டை அறிய அங்காட்டின் இலக்கியத்தைப் படி : என்றொரு மேலை நாட்டு மொழி உண்டு.

மெய்தான் !

ம் தமிழ்ச்சமுதாயம் விந்தை மண்டியது ; அவ்விந்தையில் அதற்கே உரித்தான மரபும் பண்பாடும் நியமமும் கட்டும் ஒளி காட்டி விளங்கும்.

ஆண்டவனின் இயற்கைப் பூங்காவிலே உயிர்ப்பூக்களாக பிறவிப் பூக்களாக மனிதர்கள் மணம் காட்டுகிறார்கள் : மணம் காட்டுகிறார்கள் ; மனம் காட்டுகிறார்கள் : அம்மனத்தின் மணத்தில்தான் எத்தனை வேறுபாடுகள், குணதோஷங்கள், ஏற்ற இறக்கங்கள் !

வாழ்க்கையைச் சோதிக்கவே இலக்கியம் உருவாகிறது. அச்சோதனையின் முதற்கடனாகப் புதினத்துறை அமையவல்லது.