பக்கம்:கற்சுவர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 10 I

ராஜாவின் எட்டாவது வைப்பாட்டியின் மூன்றாவது பெண்கூட அந்த மாளிகையின் எல்லையிலிருந்து வெளியே போகக் கார் இல்லாமல் நடந்து போகத் தயங்கும்போது பூபதி நடந்தே வெளியில் உலாவச் செல்வான். அரண் மனைக்குள்ளும், அரண்மனைக்கு வெளியிலும் எல்லாரிட மும் அன்பாகவும் சகஜமாகவும் பழகுவான். ராஜ குடும்பத்து வாரிசு என்ற செருக்கையோ கர்வத்தையோ அவனிடம் எள்ளளவுகடக் காண முடியாது. சோம்பல் இல்லாமல் நன்றாக உழைப்பான் அவன். அவனைக் கண் டால் அவனுடைய தந்தையும் பெரிய ராஜாவுமாகிய விஜயராஜேந்திர சீமநாத பூபதிக்குக்கூடப் பயம்தான். "எங்க அப்பாவைப்போல் படுசோம்பேறிகள் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்' என்று பூபதியே தன் நண்பர்களிடம் தந்தையைப் பற்றிக் கிண்டல் செய்து பேசுவதும் உண்டு. தந்தையும் மகனும் ஒரே ரயிலில் ஒரே ஊருக்குப் போகும் போது கூடத் தந்தை ஏ.வி. வகுப்பு அல்லது முதல்வகுப்பி லும் மகன் மூன்றாவது வகுப்பிலும்தான் போவதும் வழக்கம்; அந்த அளவிற்கு மகன் தீவிரவாதி; சிக்கன மானவன். தண்டச் செலவுகளைத் தவிர்ப்பவன். சுயப் பிரக்ஞை உள்ளவன்.

苓 朱 ::

இந்த இடங்களை எல்லாம் படிக்கிறபோது தனசேகர னுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன்னைப் பற்றியே வேறு பெயரில் யாரோ எதிரே வந்து புகழ்ந்து பேசுவது போலிருந்தது. பீமநாதபுரம் சமஸ்தானத்தைப்பற்றி விவரம் தெரிந்த யாரோதான் இந்த வாரப் பத்திரிகைச் சிறு கதையை எழுதியிருக்க வேண்டும் என்றும் பட்டது. பல இடங்களையும் சில வாக்கியங்களையும் ஒரு முறைக்கு இரு முறையாகத் திரும்பத் திரும்பப் படித்தான் அவன். தன் க்ொள்கைகள் சரி என்பதைப் பலபேர் தனக்கு முன் பாகவே வந்து கரகோஷம் செய்து ஒப்புக்கொண்டாற்

凸一?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/103&oldid=553075" இலிருந்து மீள்விக்கப்பட்டது