பக்கம்:கற்சுவர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 109

முன் வந்தது. உரியதும் நியாயமானதுமாகிய காம்பன் சேஷனை ஏலம் எடுத்தவர்களுக்கு அரசாங்கம் தருவதற்கு ஒப்புக் கொண்டது. உள்ளூரிலேயே ஊருக்கு மையமான ஓரிடத்தில் புதிய கட்டிடங்களை நிர்மாணித்த பின் மியூவி யத்தையும், சித்திர சிற்பக் கூடங்களையும் அந்தப் புதுக் கட்டிடங்களுக்கு மாற்றிக் கலெக்டர் பொறுப்பில் கொண்டு வருவது என்று ஏற்பாடாகிவிட்டது.

"ஏன் ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ் சாமிநாதனும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. .

பூபதிக்கு இந்த வெற்றி பெரும் மனத்திருப்தியை அளித் தது. ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ் சாமிநாதன் மட்டும் ரொம்ப நாள் வரை தன்னுடைய நெருங்கிய சிநேகிதர் களிடம் அந்தச் சீமநாதபுரம் பே ைஸ் ஆக்ஷன்' பற்றி பேச்சு வரும் போதெல்லாம், ' என்னுடைய அத்தனை திட்டமும் சீமநாதபுரம் இளையராஜா பூபதியாலேதான் கெட்டுப் போச்சு. அவன் சாமர்த்தியசாலி. பெரிய கலகக் காரன். கடைசியிலே தான் நினைச்சதைச் சாதிச்சு முடிச் சுட்டான். வெறும் கட்டிடத்துக்காகவும், காலி நிலத்துக் காகவும், பழைய கார்களுக்காகவும் ஃபிரிஜிரேடருக்காகவும், ஒட்டை உடைசல் ஏர்க்கண்டிஷ்ன் பிளாண்ட்டுக்காகவுமா நான் அவ்வளவு சிரமப்பட்டுப் பெரிய ராஜாவுக்குக் கேட்ட போதெல்லாம் கடன் கொடுத்து அந்த அரண்மனையை ஏலத்துக்குக் கொண்டு வந்தேன்? லட்சம் லட்சமா விலைக் குப் போகிற பிரமாதமான சிலைகள், ஓவியங்கள், மியூசியம், ரேர்புக்ஸ் எல்லாம் கிடைக்கும்னு ஆசைப்பட்டுத்தான் குடிகாரரும் காமலோலனும் ஆகிய பெரிய ராஜாவை குளிப்பாட்டி, ரூபாய்களாலே அவரை அபிஷேகம் பண்ணி நோட்டு எழுதி வாங்கினேன். இந்தப் பூபதி என்னோட எல்லாப் பிளானையும் பாழாக்கி விட்டான். கலெக்டர் கவர்மெண்ட் வரை விஷயத்தை எட்டவிட்டு அதை ஒரு பொதுப் பிரச்னையாக்கி அரசாங்கமே புதுசா மியூசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/111&oldid=553083" இலிருந்து மீள்விக்கப்பட்டது