பக்கம்:கற்சுவர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 : 1

அதைத் தவிர மற்றொரு வித்தியாசம் அதில் பழைய ராஜா உயிரோடிருந்தார். இங்கே பீமநாதபுரத்தில் தவறுகளை யும் ஊழல்களையும் செய்த பழைய ராஜா இறந்து போய். விட்டார். அந்த கதையில் வந்த இளைய ராஜா பூபதியின் நிலையிலேயே இங்கே தானும் இருப்பது தனசேகரனுக்கும் புரிந்தது, இந்த சமஸ்தானமும் இதன் உடைமைகளும் இன்னும் ஏலத்துக்குப் போகிற அவ்வளவு நிலைமைக்குக் கெட்டு விடவில்லை என்றாலும் இங்கே தன் தந்தையும் கணிசமான அளவுக்கு வெளியே கடன் வாங்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது தனசேகரனுக்கு நினைவு வந்தது. - -

கதை தனசேகரனின் நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டது. கதையில் வந்த இளையராஜா பூபதியின் கலாசாரப்பற்று தனசேகரனுக்கும் இருந்தது. அதுவும் இந்தச் சிறு கதையைப் படித்த இடம் பீமநாதபுரம் சமஸ் தானத்தின் இண்டலெக்சுவல் நகரம்’ எனப் புகழ் பெற்ற ஆவி தானிப்பட்டியாக இருந்ததனால் அந்த உணர்வுகள் மேலும் பெருகின. வளர்ந்திருந்தன. இதயத்தில் நின்றன. மனம் ஒருவிதமான உருக்கத்தில் இலயித்துப் போயி ருந்தது.

மறுநாள் காலையில் எழுந்ததும் காபி குடித்துக் கொண்டே மாமா தங்கபாண்டியனிடம் அந்த சிறுகதையை பற்றிப் பேச்சுக் கொடுத்தான் தனசேகரன்.

'காரியத்தைக் கவனிக்காமே சும்மா கதையையும், நாவலையும் படிச்சுக்கிட்டிருக்கிறதிலே என்ன பிரயோ ஜனம்? இந்த ஊர்லே நமக்கு நிறைய வேலை இருக்கு ஒரு வாரத்துக்குள்ளே நான் மட்டுமாவது மலேசியாவுக்குத் திரும்பியாகணும். ஹாங்காங்குக்கு ரப்பர் எக்ஸ்போர்ட் விஷயமா ஒரு எக்ரிமெண்ட் பெண்டிங்கிலே இருக்கு' என்று பதில் கூறினார் மாமா. х

அவன் சொல்லிய கதையைப் பற்றி அவர் கவனம். திரும்பவில்லை. அவனே அவர் கவனத்தை ஈர்த்து அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/113&oldid=553085" இலிருந்து மீள்விக்கப்பட்டது