பக்கம்:கற்சுவர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 1 # 2 கற்சுவர்கள்

வாரப் பத்திரிகையையும் எடுத்துக் காட்டிக் கதைச் சுருக்கத்தையும் அவருக்குச் சொன்னான். முழுவதும் கேட்டபின் யாரோ நம்ம சமஸ்தானத்து உள் நிலவரம் எல்லாம் தெரிஞ்சவன்தான் எழுதியிருக்கான். விட்டுத் தள்ளு. இது யாருன்னு கண்டுபிடிச்சு இப்போ என்ன ஆகப்போகுது?’ என்று சுலபமாகப் பதில் சொல்லி விட்டார் மாமா!

காலை பத்து மணிக்கு அவர்கள் தங்கியிருந்த ஆவிதானிப்பட்டி பி. டபிள்யூ. டி. இன்ஸ்பெக்ஷன் பங்களா வுக்கு ஐந்தாறு தமிழ்ப் புலவர்கள் தேடி வந்திருந்தார்கள். மாமா அவர்களைப் பார்க்கவே தயங்கினார். தன சேகரனோ அவர்களைச் சந்திக்கத்தான் வேண்டும் என்றான்.

'சந்திக்கணும்னு நீ விரும்பினால் தாராளமாகச் சந்தித்துப் பேசு. எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை, ஆனால் இந்தப் புலவங்க ஏதாவது மான்யம் நின்னு போனது பத்தித்தான் உங்கிட்ட வந்து குறை சொல்லப் போறாங்க சமஸ்தானத்தை உங்கப்பாரு இப்ப வச்சிட்டுப் போயிருக்கிற கஷ்ட நிலையிலே யாருக்கும் எதுவும் செய்யிறாப்லே இல்லை. அதை மட்டும் நல்லா ஞாபகத் திலே வச்சுக்கோ’’ என்றார் மாமா.

மாமாவை உள்ளேயே விட்டுவிட்டு வெளி வராந்தா வுக்குப் போய் அந்தப் புலவர்களோடு அமர்ந்து பேசினான் தனசேகரன். தேடி வந்துவிட்டவர்களை முகத்தில் அடித் தாற்போல் திருப்பி அனுப்ப அவனுக்கு விருப்பம் இல்லை. எல்லாருக்கும் ப ரு கு வ த ற் கு க் காபி வரவழைத்துக் கொடுத்து உபசரித்தபின் அவன் கனிவாக உரையாடத் தொடங்கினான். -

வந்திருந்த அந்தப் புலவர்கள் மறுபடி சமஸ்தானத்தில் வருஷா வருஷம் நவராத்திரி விழாவையும், தமிழ்ப் புலவர் களின் வித்வத்சதலையும் நடத்தவேண்டும் என்றும், . அப்படி நடத்தினால்தான் பீமநாதபுரத்தைப் பிடித்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/114&oldid=553086" இலிருந்து மீள்விக்கப்பட்டது