பக்கம்:கற்சுவர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 11 3

கிற வறுமைகளும், கடன் கஷ்டங்களும், பீடைகளும் விலகும்-மழை நன்றாகப் பெய்யும் என்றும் யோசனை கூறி னார்கள். அவர்களுடைய மனம் புண்பட்டு விடாமல் தன சேகரன் அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.

சமஸ்தானமே ஆவிதானிப்பட்டிப் புலவர்களின் பிரபந்தங்களை எல்லாம் வெளியிட வேண்டும்' என்றார் மற்றொரு புலவர். தனசேகரன் எதையும் நேருக்கு நேர் மறுத்து விடாமல் கேட்டுக்கொண்டான். சிறிது நேரம் கழித்து அவர்களை வாயில்வரை உடன் சென்று வழி யனுப்பிவிட்டு உள்ளே திரும்பியதும் மாமா வேறொரு முக்கியமான விஷயத்தைத் தனசேகரனிடம் ஆரம்பித்தார்.

9.

தனசேகரனின் மனத்தில் அப்போதிருந்த விஷயத்திற் கும், மாமா தங்கபாண்டின் பேசத் தொடங்கிய விஷயத்திற். கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அவன் அப்போ திருந்த இனிய உன்னதமான மன நிலையை அவர் பேச்சு ஒரளவு கலைத்து விட்டது என்று கூடச் சொல்ல வேண்டும். அவன் சமஸ்தானத்தின் கலாசாரப் பெருமைகளை யும் புலமைச் செல்வங்களையும் பற்றி நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போது அவர் அவனுடைய கல்யாணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

"இனிமேல் நீ உன் குடும்பப் பொறுப்புக்களையும், சமஸ்தானப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரிய ராஜா. அதான் உங்கப்பாவோட உனக்கு. ஒத்து வரலேன்னுதான் நீ மலேசியாவுக்கு வந்து என்னோட இருக்கும்படியாச்சு. இனிமேல் அந்தப் பிரச்னை இல்லை. கல்யாணத்தை முடிச்சுக்கிட்டு நீ ஊரோட வாசலோட இருந்திட வேண்டியதுதான். ஏற்கனவே நீயும் நானும் காலஞ்சென்ற உங்கம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/115&oldid=553087" இலிருந்து மீள்விக்கப்பட்டது