பக்கம்:கற்சுவர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 121

- "சரி: இப்போ இந்த திவானோட பேரனைத்தான் கப்பிட்டனுப்பு மேன். சும்மா ஒரு யோசனை கேட்கத் தானே?" என்று மாமா சொன்னார். உடனே காரியஸ்தர் டெலிஃபோன் நம்பரைத் தேடிக் கூப்பிட்டார். வக்கீல் ஊரில் இல்லை என்றும் சென்னை சென்றிருக்கிறார் என்ப தாகவும் பதில் வந்தது.

உடனே அவர்கள் மூவருமாக வக்கீல் சம்பந்தப்பட்ட வேலையை அப்புறமாகக் கவனித்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துவிட்டு வீல் வைத்துப் பூட்டப்பட்டிருத்த மகாராஜாவின் அந்தரங்க அறையைத் திறப்பதற்குச் சென்

றார்கள். -

பெரிய ராஜா இறந்த தினத்தன்று சில பொருள்கள் திருடு போகத் தொடங்கியதை முன்னிட்டு அவருடைய அடலத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றதுமே இந்த அறையைப் பூட்டிச் சீல் வைத்திருந்தார்கள். இப்போது கடன்கள், வரவு செலவு நிலவரங்கள், அரண்மனைக் கருவூலம் பற்றிய பட்டியல்கள் இவற்றைத் தேடுவதற்காக

அந்த அறையை மறுபடியும் அவர்களே திறக்க நேர்ந்தது.

பல உண்மைகளை அறிந்து கொள்வதற்குக் காலஞ் சென்ற பெரிய ராஜா, அவர் கைப்படவே எழுதிய டைரிகள் தேவைப்பட்டன. தனசேகரன் மட்டுமே அந்த டைரிகளைப் படிக்கும் உரிமையுடையவன் என்றும் கணக்கு வழக்குகளைச் சரிசெய்வதற்கும் வரவு செலவு பற்றிய நிலவரங்களை அறிவதற்கும். அந்த டைரிகளிலிருந்து தன சேகரன் ஏதாவது விவரங்களைக் கூற முடியுமானால் உபகாரமாக இருக்குமென்றும் மாமாவும் காரியஸ்தரும் அபிப்பிராயப் பட்டார்கள். . தனசேகரனும் அதற்கு இணங்கியிருந்தான். அவர்கள் பெரிய ராஜாவின் அந்தரங்க அறையைத் திறந்தபோது பிற்பகல் மூன்றேகால் மணி, பகலுணவுக்குப் பின் சிறிது நேரம் ஒய்வு கொண்ட பிறகு ஆளுக்கு ஒரு கப் காபியும் அருந்திவிட்டு அவர்கள் அந்த வேலையைத் தொடங்கியிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/123&oldid=553095" இலிருந்து மீள்விக்கப்பட்டது