பக்கம்:கற்சுவர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கற்சுவர்கள்

வைர தகைகளுக்குப் பதில் கில்ட் நகைகள் பேருக்கு அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை எல்லைக்குள்ளேயே இருந்த குலதெய்வத்தின் கோயில் நகைகள் கூடக் களவாடப்பட்டிருந்தன. காவலாளியே திருடிய திருட்டை யாரிடம் போய் முறையிடுவது என்று அவர்களுக்குப்புரியவில்லை. சில பெரிய பெரிய வெள்ளிப் பாத்திரங்கள், கோவிலுக்குச் சொந்தமான ஒரு பெரிய தங்கக்குடம், சில சிறிய தங்கப் பாத்திரங்கள் ஆகியவை தான் மீதமிருந்தன. அப்பா இவற்றை மட்டும்.எப்படி மீதம் விட்டார் என்று தனசேகரனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

'நிலவரம் ஒண்னும் திருப்தியா இல்லே தனசேகரன்! மேலே மேலே தேடிப் பார்த்தோம்னாக் குழப்பம்தான் மிஞ்சும் போல இருக்கு. எப்படியும் இந்த அரண்மனை விவகாரங்கனை, இன்னும் ஒரு வாரத்திலேயோ பத்து நாளிலேயோ செட்டில் பண்ணி, உங்கிட்டி விட்டுட்டு நான் ஊருக்கு ப்ளேன் ஏறலாம்னு பார்க்கிறேன். நீ இந்த டிைரி களைச் சீக்கிரம்.படிச்சுப் பார்த்து உங்கப்பாவோட வரவு செலவுகளைச் சரி பாரு, அவர் வாங்கின. கடனையும் டிைரி ஜிலே எழுதி இருக்கனும், திருப்பிக் கொடுத்த சுடனையும் இகாடுக்க வேண்டிய கடனையும் டைரியிலே எழுதியிருக்க தும்' மாமா தாம் சிண்டுபிடித்த டைரிகளைத் திரட்டி எடுத்துத் தனசேகரனிடம் நீட்டினார். 'நான்தான் படிக்க ணும்.கிறது. இல்லே மாமா! நீங்களே ...இதையெல்லாம். புடிச்சுக்கண்டுபிடிச்சு எழுதினாலும் பரவாயில்லே. மாமா இதைப் பார்த்தால் எனக்கும் தருப்திதான்.' - -

ல் "அது முறையில்லே தனசேகரன்! ஒரு தகப்பனோட அந்தரங்கக் குறிப்புக்களை மகன் பார்க்கிறதே கூடச் சரி இல்லை. ஆனால் காரியம் ஆகனுமேங்கறதுக்காகத்தான் இதை உன்னைப் பார்க்கச் சொல்றேன் நான், நீயே பாரு! நான் பார்க்க வேண்டாம்' என்று மாமா மறுத்துவிட்டார். தனசேகரன் அப்பாவின் டைரிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். ஏற்கெனவே ஆ.வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/126&oldid=553098" இலிருந்து மீள்விக்கப்பட்டது