பக்கம்:கற்சுவர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 39

"தெய்வத்தையும் வேண்டிக் கொள்ளத்தான் போகி. றேன். இப்போது உங்களையும் வேண்டிக்கொள்கிறேன். அவ்வளவுதான். முன்னதை நான் தினந்தோறும் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறேன். உங்களை இன்றுதான் தனி யாகச் சந்திக்கிறேன். அதனால் உங்களிடமும் ஒரு வார்த்தை கேட்டேன். இணங்குவதும் இணங்காததும் உங்கள் இஷ்டத்தைப் பொறுத்த விஷயம், நான் உங்களை வற்புறுத்தவில்லை. உங்களை மட்டும் என்ன? என் தலை எழுத்தை மாற்றிவிடச் சொல்லித் தெய்வத்தைக்கூட நான்' அதிகமாக வற்புறுத்த மாட்டேன்.'

'எந்த வேண்டுதலும் வற்புறுத்தல் ஆகாது. வற்புறுத்த முடியாதவற்றைத்தான் நாம் வேண்டிக் கொள்கிறோம்.'

"அப்படி இல்லை யுவராஜா திரும்பத் திரும்ப முறை யிட்டால் வேண்டுதல்கள் கூட வற்புறுத்தல் ஆகிவிடு கின்றன." என்று அவள் சிரித்துக்கொண்டே கறியபோது அந்தச் சிரிப்பு மிக மிக நயமாகவும், நளினமாகவும் வெளிப்பட்டு மறைந்தது.

'நீங்கள் என்னைத் தனசேகரன் என்று கூப்பிட்டால் போதும் அம்மா: முறைப்படி பார்த்தால் கூட நான்' உங்களுக்கு மகன் முறைதான் ஆக வேண்டும்' என்று தனசேகரன் அவள் தன்னை யுவராஜாப் பட்டம் சூட்டிக் கூப்பிட்டதை நாசூக்காக மீண்டும் மறுத்தான்.

இப்போது குருக்கள் மெல்ல நடுவே குறுக்கிட்டார்:"சின்னராணி என்ன சொல்றாங்கன்னுதான் அப்புற மாக் கேளுங்களேன். இவங்க எல்லாரையும் போல இல்லே. ரொம்ப நல்ல மாதிரி சுபாவம். பணத்தாசை கொஞ்சமும் கிடையாது." -

குருக்கள் இதை தெரிவித்ததிலிருந்து மறைமுகமாக, அவளுக்காக ஒரளவு பரிந்து பேசியிருக்கிறார் என்றே தன. சேகரனுக்குப் புரிந்தது. அவனும் அவருடைய இந்த வார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/141&oldid=553113" இலிருந்து மீள்விக்கப்பட்டது